Heart Symbol History
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை அன்பின் வெளிப்பாடாக Heart Symbol இருக்கிறது. மனித உடலில் உள்ள இதயத்தின் வடிவமைப்பு இந்த இதய குறியீட்டின் வடிவமைப்புடம் முற்றிலும் வேறுபட்டது தான். ஆனால் ஏன் அதை இதய குறியீடு என்று சொல்கிறார்கள். இந்த குறியீடு எப்படி அன்பின் வெளிப்பாடாக மாறியது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Power Button குறியீட்டுக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..? |
Heart Symbol History in Tamil:
அன்பு, காதல் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது இந்த குறியீடு தான். இந்த குறியீடு உலகமெங்கும் மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். இந்த குறியீடானது நம் கலாசாரத்தில் ஒன்றாகி போய்விட்டது.
நாம் தான் இதை அன்புக்குரிய குறியீடு என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த இதய குறியீடு ( Heart Symbol ) காதல் என்ற அர்த்தத்தையே குறிக்கவில்லை என்று ரோமானிய நாட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
இந்த குறியீடு ஒரு விதையின் வடிவமைப்பு என்று சொல்லப்படுகிறது. பண்டைய கிரேக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சிரேன் (Cyrene) என்ற நாட்டில் தான் இந்த விதைகள் பயிரிடப்பட்டன. அந்த நாட்டில் சில்பியம் என்ற செடி பயிரிடப்பட்டது. இந்த சில்பியம் என்னும் செடி ஒரு வகையான மலர் செடி என்று சொல்லப்படுகிறது.இந்த சில்பியம் செடியின் ஒவ்வொரு பாகங்களும் பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தது. அதனால் இந்த சில்பியம் செடியின் விதைகளை உணவு மற்றும் மருந்து என்று அனைத்திலும் சேர்த்து வந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த செடி அந்த நாட்டில் அதிக செல்வம் பெற்றுத் தரும் செடியாக இருந்திருக்கிறது. இந்த செடி சகல நோயையும் போக்கும் சக்தியை கொண்டுள்ளது.
நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா..? |
இதய குறியீடு வந்த கதை:
கிரேக்க நாட்டில் இருப்பவர்கள் இந்த விதைகளை அதிகமாக பயிரிட்டு பின் அவற்றை விற்று பலமடங்கு லாபம் பெற்றார்கள். அதனால் அவர்கள் பயன்படுத்திய நாணயங்களில் இந்த விதையின் குறியீட்டை அதாவது இதய குறியீட்டை பதித்தார்கள்.அதன் பின் கிரேக்க நாட்டை சேர்ந்த அரிஸ்டாட்டில் ( Aristotle ) என்ற மருத்துவர் மனித இதயம் மூன்று அறைகளுடனும் அதன் மையப்பகுதியில் கூம்பு போன்ற வடிவதிலும் இருக்கும் என்று கூறினார். அதற்கு அந்த காலத்தில் இருந்த மக்கள் இதயம் இப்படி தான் இருக்கும் என்று பல எதிர்ப்புகளை தெரிவித்தார்கள்.
அதன் பின் இவர் எழுதிய ஒரு புத்தகத்தில் இதயம் பற்றிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதனால் அந்த நாட்டில் இருக்கும் மக்கள் இந்த குறியீட்டை பாலினத்துடன் தொடர்புபடுத்தி இதை காதல் சின்னமாக பயன்படுத்தினர். அதன் பிறகு தான் இந்த குறீயீடு காதல் சின்னமாக மாறியது.
பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகள் சொல்லும் கதை என்ன..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |