Hero vida v1 pro Electric Scooter
இன்றைய கால கட்டத்தில் வண்டி இல்லாத வீடுகளே இல்லை. ஒரு வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லாரிடமும் தனித்தனி வண்டி உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வண்டியை பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் வாங்கிய வண்டியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த மாட்டார்கள்.
ஒரு 3 அல்லது 4 வருடம் கழித்து புதிய மாடல் வண்டி என்ன வந்திருக்கிறது என்று பார்த்து விட்டு அதில் ஒரு வண்டியை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வண்டியை வாங்குவது என்று யோசித்து கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் ஸ்கூட்டரை பற்றிய தகவலை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
ஹீரோ நிறுவனம்:
ஹீரோ நிறுவனமானது முதல் முறையாக விடா வி1 ப்ரோவை எலட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
வடிவமைப்பு:
இந்த வண்டியானது கூர்மையான எல்இடி ஹெட்லைட், ஸ்மட்ஜ்டு விசிஆர் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர் போன்ற பக்க புரொபைல் ஏரோடைனமிக் பாடி ஒர்க் மற்றும் அலாய் வீல் ஷிப்ட் சீட், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுடன் பதிக்கப்பட்ட கிராஃப் ரெயில் மற்றும் வளைந்த தட்டு வடிவமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
விடா வி1 ப்ரோ முன் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகளைப் பெறுகிறது. V1 ப்ரோவின் கர்ப் எடை 125 கிலோ ஆகும். விடா வி1 ப்ரோவில் டியூப்லெஸ் டயர் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.
வேகம்:
இதில் 3.9 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி பேக்கை இணைத்துள்ளது. இதனை எளிய முறையில் சார்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இதனை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் எடுத்து கொள்ளும். மேலும் நிறுவனம் 5.02 கிலோவாட்களை உற்பத்தி செய்யும் 4 கிலோ வாட் LCD ஹப் மோட்டாரையும் வழங்கியுள்ளது. 95nm மற்றும் பிக்கப் டார்க் 95nm. இதன் உச்ச வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் வரையும் செல்ல கூடியது.
விலை:
விடா வி1 ப்ரோவில் 6000 வாட் பிஎம்எஸ்எம் பொருத்தப்பட்டுள்ளது. விடா வி1 ப்ரோவின் எஸ்டிடி மாறுபாடு ரூ.1.45 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
முக்கிய குறிப்பு:
Fuel Type | எலக்ட்ரிக் |
Motor Power | 6000 |
Range | 110 km/charge |
Charging Time | 6 Hr |
Kerb Weight | 125 Kg |
price | ரூ. 1.45 லட்சம் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |