வீடு நறுமணத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? | How to Make Odonil at Home in Tamil
How to Make Odonil at Home in Tamil..!
பொதுவாக அனைவரும் வீட்டை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்க்காக வீடு நறுமணத்துடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கப்படும் நறுமணம் நிறைந்த பொருட்களை அதிக பணம் செலவு செய்து வாங்கும் பழக்கமும் பலரிடமும் இருக்கிறது. இருப்பினும் அதன் நறுமணம் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிரந்தரமாக இருக்காது. எனவே வீட்டை என்றும் நறுமணத்துடன் வைத்து கொள்ள வீட்டிலேயே மிக எளிமையாக Air Freshener தயார் செய்யலாம். இதற்காக அதிக பணம் செலவு செய்து கடைகளில் விற்கப்படும் நறுமணம் நிறைந்த ஸ்ப்ரே பாட்டில்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இருக்காது. அதேபோல் இந்த Air Freshener தயார் செய்ய அதிக செலவும் ஆகாது. வீட்டில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதாக Air Freshener தயார் செய்யலாம்.
சரி வாங்க 24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்தறியலாம்.
வீட்டிலேயே Odonil தயார் செய்வது எப்படி என்று முதலில் பார்க்கலாம் வாங்க..
ஏசியை நம் வீட்டில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? |
வீடு நறுமணத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தேவையான பொருட்கள்:-
- பேக்கிங் சோடா – 3 ஸ்பூன்
- தங்களுக்கு பிடித்த சென்ட் (வாசனை திரவியம்) – 5 துளிகள்
- ரோஸ் மில்க் எசன்ஸ் – 3 துளிகள்
- பசை (Normal gum) – தேவையான அளவு
செய்முறை:-
Odonil room freshener step: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா, வாசனை திரவியம் ஐந்து துளிகள் மற்றும் ரோஸ் மில்க் எசன்ஸ் மூன்று துளிகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
How to Make Odonil at Home in Tamil Step: 2
அதன் பிறகு தேவையான அளவு அதாவது இரண்டு ஸ்பூன் Gum சேர்த்து கலவையை நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
How to make air freshener at home step: 3
பின் ஒரு பேப்பர் கப்பினை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் கலந்து வைத்துள்ள பேக்கிங் சோடா கலவையை சேர்த்து ஸ்பூனை பயன்படுத்தி கலவையை நன்றாக அழுத்தி விட வேண்டும். மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.
how to make odonil at home in tamil step: 4
அதன் பிறகு 24 மணி நேரம் கலவையை பேப்பர் கப்பில் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் கப்பில் இருந்து கலவையை தனியாக எடுத்தால் கலவையானது நன்றாக காய்ந்து கெட்டியாக இருக்கும். இப்பொழுது odonil தயார் இதனை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு சிறிய அட்டை பெட்டியில் போட்டு தங்கள் பாத்ரூக்கு இந்த odonil பயன்படுத்தலாம். நல்ல நறுமணமாக இருக்கும், தங்களுக்கு எப்போது எல்லாம் இவற்றில் இருக்கும் நறுமணம் குறைவது போல் தோன்றுகிறது அப்போது எல்லாம் சிறிதளவு வாசனை திரவத்தை தெளித்து விடுங்கள்.
இந்த odonil-ஐ தாங்கள் ஒரு வருடம் வரை கூட பயன்படுத்தலாம் இவற்றில் உள்ள நறுமணம் அப்படியே நிரந்தரகமாக இருந்துகொண்டே இருக்கும்.
இது மாதிரி தங்களுக்கு பிடித்த நறுமணத்தில் Air Freshener-ஐ தாங்களே தங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதற்காக கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் Air Freshener & odonil போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |