நீண்ட தூர பயணத்தை கொண்டாட Honda CB350…

Advertisement

Honda CB350 DLX

இன்றைய காலகட்டத்தில் வீட்டிற்கு குறைந்தது 1 பைக் கண்டிப்பாக உள்ளது. பைக் இப்போதைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருளாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பலவிதமான பைக் சந்தைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது. அதன் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் விரும்புவது கிளாசிக் பைக்குகள், அதிக வேகத்தில் ஓட்ட நினைக்கும் சாகச பிரியர்களுக்கு ரேஸ் பைக் இப்படி அவர்களின் தேவைக்கு ஏற்ப வாகனங்களின் வரத்தும் சந்தையில் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இன்று மக்கள் அதிகம் விரும்பும் Honda CB350 பைக் பற்றிய முழுத்தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Honda CB350:

Honda CB350 பைக் 1960களில் சந்தைக்கு வந்தது. அதன் வரிசையில் Honda CB350 DLX பைக் 2020-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Honda H’Ness CB 350 4 வகைகளில் தற்போது சந்தையில் கிடைக்கிறது. அதாவது Honda CB350- DLX, Honda CB350-DLX Pro, Honda CB350-DLX Pro chrome, மற்றும் Honda CB350 Legacy Edition.

Honda CB350 DLX வடிவமைப்பு:

Honda CB350 DLX வடிவமைப்பு

CB350 DLX பைக், 1960 மற்றும் 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட Classic Honda CB பைக்கை போன்று Retro style-லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் வட்ட ஹெட்லைட், ஒரு கண்ணீர் துளி வடிவ fuel tank, குரோம் ஃபெண்டர்கள் மற்றும் சற்றே மேம்படுத்தப்பட்ட குரோம் எக்ஸாஸ்ட், மற்றும் பேர்ல் நைட்ஸ்டார் பிளாக் (Pearl Night Star Black), பேர்ல் இக்னியஸ் பிளாக் (Pearl Igneous Black ), மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் (Mat Marshall Green Metallic), ப்ரீசியஸ் ரெட் மெட்டாலிக் ( Precious Red Metallic ) மற்றும் மேட் மாசிவ் கிரே (Mat Massive Grey) உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது .

Engine செயல்திறன்:

Honda CB350 DLX, 348.36 cc இன்ஜின் மூலம் இயங்குகிறது.

Honda CB350 DLX – ன் மைலேஜ் 45.8 kmpl ஆகும்.

Honda CB350 DLX-ன் இன்ஜின் வகை 4stroke SI இன்ஜின் ஆகும்.

எரிபொருள் திறன் 15 L ஆகும்.

அம்சங்கள்:

honda cb350

CB350 DLX ஆனது நிலையான Dual channel ABS அமைப்புடன் இருக்கிறது.

Honda CB350 DLX-ல் Bluetooth இணைப்பு அம்சம் உள்ளது. இது ரைடர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பைக்குடன் இணைக்க உதவுகிறது.

Honda CB350 DLX-ல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட் மற்றும் குரோம் பூசப்பட்ட டெயில் லைட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன .

விலை:

Honda CB350- DLX விலை ரூபாய் 2.10 lakhs.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement