Horse Gram in Tamil:
ஹாய் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் கொள்ளு பற்றிய சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளபோகிறோம். மற்ற பயிறு வகைகளை விட கொள்ளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் கொள்ளை தண்ணீரில் ஊறவைத்து அதனை அவித்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று சொல்வார்கள். அத்தகைய கொள்ளு குதிரைக்கு உணவாகவும் பயன்படுகிறது. மேலும் கொள்ளை பற்றிய சில செய்திகளை தெரிந்து கொள்ள தொடரை தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்
கொள்ளு பற்றிய தகவல்கள்:
கொள்ளு தென் தமிழகத்தில் மட்டும் விளைய கூடிய ஒரு வகையான பயிறு வகைகள் ஆகும். இந்த கொள்ளுக்கு முதிரை என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.
இந்த கொள்ளு தட்டையான வடிவம் கொண்டதாகவும் பழுப்பு மற்றும் மண் நிறத்தில் தோற்றம் அளிக்க கூடியதாகவும் இருக்கிறது.
கொள்ளை குதிரைக்கு உணவாக அளிப்பதால் ஆங்கிலத்தில் Horse Gram என்றும் அழைப்பார்கள்
கொள்ளின் வேறு பெயர்கள்:
கொள்ளிற்கு தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் வெவ்வேறு மொழிகளில் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அந்த பெயரை பட்டியலை கீழே பார்க்கலாம்.
- மலையாளம்- மூதிரா
- தெலுங்கு- உலாவாலு
- அரபி- அபுல் குல்த்
- சமஸ்கிருதம்- குளதா களை
- சீனா- பியான் டௌ
- ஆங்கிலம்- ஹார்ஸ் கிராம்
கொள்ளு பயன்கள்:
கொள்ளில் கால்சியம், புரதம், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்ற தனியங்களை விட கொள்ளில் அதிக அளவு இருக்கிறது.
இந்த கொள்ளை வாரத்திற்கு 3 முறை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
அதிக உடல் எடை மற்றும் அதிக கொழுப்பு உள்ளவர்கள் இந்த கொள்ளை சாப்பிட்டால் விரைவில் நல்ல பயன் தரும்.
ஒரு வாரம் தொடர்ந்து கொள்ளை நாம் சாப்பிட்டில் ஏதோ ஒரு வகையில் எடுத்து கொண்டால் அது உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்த படுத்துகிறது.
சிறுநீரக கற்கள், சிறுநீரக வீக்கம் போன்றவற்றையில் இருந்து விடுபடுவதற்கு கொள்ளு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கொள்ளை குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கருப்பையை ஆரோக்கியமாக வைக்கிறது.
உடலில் உள்ள எலும்புகள் திடம் பெறுவதற்கும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்வதற்கும் கொள்ளு பயன்படுகிறது.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருக்கும் போது கொள்ளை ரசம் அல்லது சூப் வைத்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வைக்கிறது.
மற்ற பயிறு வகைகளை உணவில் எடுத்து கொள்ளும் அளவிற்கு கொள்ளை நாம் சாப்பிடுவது இல்லை. இப்போது கொள்ளின் பயன்கள் தெரிந்தால் வாரத்திற்கு ஒரு முறையாவது கொள்ளை உணவு சேர்த்து கொள்ள வேண்டும்.
கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள் |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |