புதிதாக வீடு கட்டப்போகின்றிர்களா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

House Construction Cost in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை மற்றும் உறையுள் அதாவது வீடு ஆகியவை தான். இதில் மூன்றாவதாக உள்ள வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் மிக பெரிய கனவாக உள்ளது. அப்படி நமது மிக பெரிய கனவை நிறைவேற்றி கொள்வதற்கு ஏற்ற காலம் வந்துவிட்டது என்றால், அதற்கான ஆயத்த பணிகளை முதலில் நாம் மேற்கொள்வோம். அதாவது அதனை கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவோம் மற்றும் அதனை வாங்குவதற்கு தேவையான பணத்தை தயார்படுத்தி வைத்து கொள்வோம். நாம் ஒரு வீடு கட்ட போகின்றோம் என்றால் தேவையான பொருட்களை வாங்குவோம் மற்றும் அதனை வாங்குவதற்கு தேவையான பணத்தை தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு முதலில் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் மற்றும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பது தெரிந்திருக்கணும். அதனால் தான் இன்று 1200 சதுரடியில் மாடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி விரிவாக காண போகின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Construction Cost for 1200 sq ft House in Tamil:

What are the equipment required for house construction in tamil

முதலில் 1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பார்க்கலாம். அதாவது 1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 26.4 லட்சம் முதல் 30 லட்சம் வரை செலவாகலாம்.

1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. செங்கல்
  2. சிமெண்ட்
  3. மணல்/எம்-மணல்
  4. ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்)
  5. வூட்ஸ்
  6. கதவுகள்
  7. ஜன்னல்
  8. எஃகு
  9. ஓடுகள்
  10. வர்ணங்கள்
  11. மின்சார பொருட்கள்
  12. பிளம்பிங் பொருட்கள்
  13. சுகாதார பொருட்கள்
  14. தச்சு பொருட்கள்
  15. False Ceiling Materials

தேவைப்படும் சிமெண்டின் அளவு மற்றும் விலை:

Construction Cost for 1200 sq ft House in Tamil

வீடு கட்டுவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் பொருட்களில் ஒன்று தான் சிமெண்ட். இப்பொழுது 1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும் அதற்கு எவ்வளவு செலவாகும் பார்க்கலாம்.

அதாவது 1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 600 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 400 என்ற பட்சத்தில் 2,40,000 செலவு ஆகும்.

1000 சதுர அடியில் வீடு கட்ட ஆகும் செலவு எவ்வளவு

தேவைப்படும் கம்பிகளின் அளவு மற்றும் விலை:

What are the equipment required for 1200 sq ft house construction in tamil

இந்த கம்பிகள் தான் வீட்டிற்கு மொத்தமாக உறுதியை சேர்க்கும். ஆகவே அதனை சரியாக வாங்கிகொள்வது அவசியம். 1,200 சதுரடி வீட்டிற்கு எவ்வளவு கம்பிகள் தேவைப்படும் என்றால் 6.5 டன் ஆகும்.

அப்படியென்றால் தோராயமாக 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்றால் 6.5 டன் கம்பியின் விலை தோராயமாக 4,87,500 ரூபாய் ஆகும்.

தேவைப்படும் செங்கல்லின் அளவு மற்றும் விலை:

Construction Cost for 1200 sq ft House

500 சதுரடிக்கு 11,000 ஆயிரம் கல் தேவைப்படும் பட்சத்தில் 1200 சதுரடிக்கு எவ்வளவு கல் தேவைப்படும் 24,200 கல் தேவைப்படும். ஒரு கல்லின் விலையானது 11 ரூபாய் என்றால் 24,200 கல்லின் விலை எவ்வளவு 2,66,200 ரூபாய் ஆகும்.

 

தேவைப்படும் மணலின் அளவு மற்றும் விலை:

Construction Cost for House in Tamil

வீடு கட்டுவதற்கு எவ்வளவு M சாண்ட் மணல் தேவைப்படும். இந்த M சாண்டின் 1 யூனிட் விலை 38,000 ஆயிரம் ஆகும். அப்படியென்றால் நமக்கு 22 யூனிட் மணல் தேவைப்படும்.

இதனுடைய விலையானது தோராயமாக 8,36,000 ரூபாய் ஆகும். ஒருவேளை நீங்கள் P சாண்ட் மணலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனின் 1 யூனிட் விலை 5000 ரூபாய் ஆகும்.

நமக்கு தோராயமாக 8 யூனிட் மணல் தேவைப்படும். இதனுடைய விலையானது 40,000 ரூபாய் ஆகும்.

தேவைப்படும் ஜல்லியின் அளவு மற்றும் விலை:

What are the equipment required for 1200 sq ft house construction

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதாவது 20 mm Aggregate ஜல்லி, 40 mm Aggregate ஜல்லி ஆகிய இரண்டுமே தேவைப்படும். 20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும்.

நமக்கு 12 யூனிட் தேவைப்படும். அதாவது நமக்கு மொத்தம் 36,000 ரூபாய் தேவைப்படும். அதேபோல் 40 mm Aggregate ஜல்லியின் விலை 2800 ரூபாய் என்றால் நமக்கு தேவையான ஜல்லிகள் 6 யூனிட் ஆகும். அப்படி என்றால் 16,800 ரூபாய் செலவு ஆகும்.

 

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் தான் வீடு கட்டுவதற்கு முக்கிய தேவை. அதற்கு பிறகு வீட்டிற்கு டைல்ஸ் அதன் பின்பு கரண்ட் என நிறைய செலவுகள் இருக்கும். அது அனைத்தும் உங்களின் வீட்டின் வசதிகளை பொறுத்து மாறுபடும்.

ஆகையால் பொதுவாக வீடு கட்ட ஆரம்பித்தால் 10,00,000 ரூபாய் கையில் வைத்து கொண்டு ஆரம்பிப்பது நல்லது.

800 சதுரடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement