தங்கத்தின் விலை எதனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது
அந்த காலம் முதல் இந்த காலம் வரை தங்கத்தின் உள்ள மோகம் மட்டும் என்றும் குறையவில்லை. அதுவும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் யாராவது புது மாடலாக நகை ஏதும் அணிந்திருந்தால் அவற்றை வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைப்போம். பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் தங்கத்தை சேமித்து வைப்பது அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் கிராம் 500 ரூபாய்க்கு விற்றது இப்போ 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பலருக்கும் இந்த தங்க விலையானது எதனை வைத்து தீர்மானம் செய்கிறார்கள் என்ற கேள்விகள் இருக்கும். அதனால் தான் இந்த பதில் தங்கத்தின் விலை எதனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
எப்போதும் டிமாண்ட்:
தங்கத்திற்கு எப்போதும் டிமாண்ட் இருக்கும். மனிதர்களிடம் தங்கம் அதிகமாக இருந்தால் தான் அவர்களை மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. பொதுவாகவே ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருந்தாலே அதனுடைய விலை ஏறும்.
தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. தங்கத்தின் தேவை அதிகமாக இருந்தால், விலை உயரும். தங்கத்தின் வழங்கல் அதிகமாக இருந்தால், விலை குறையும்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் இன்றைய தங்க விலை நிலவரம் 29.02.2024
பொருளாதாரம்:
பொருளாதாரம் மோசமாக இருக்கும்போது, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் விலையும் அதிகரிக்கும்.
பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது, பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரித்து விலை உயரும்.
இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தால் தங்கத்தின் விலை உயரும், சர்வதேச சந்தையில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வது இந்தியாவுக்கு விலை அதிகம். இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்:
தங்கத்தின் விலையானது ஒரே மாதிரியாக இருக்காது, ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும். இவற்றில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் உங்ககுளுடைய முதலீடு எவ்வளவு, வருமானம் எவ்வளவு என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
GRT தங்கம் விலை இன்று 29.02.2024
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — | Today Useful Information In Tamil |