இந்தியாவில் உள்ள மொத்த உயர் நீதிமன்றங்களின் பட்டியல் 2023!

Advertisement

How many High Courts are there in India Presently in Tamil!

வணக்கம்! நம் இந்திய நாட்டில் உயர் நீதி மன்றங்கள் எத்தனை இருக்கின்றது என்று தெரியுமா?  நம் இந்திய நாட்டில் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன , அவை எந்த ஆண்டு நிறுவப்பட்டன போன்ற முழு விவரங்களையும் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம்!

இந்தியாவில் மொத்தம் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன?

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றம்தான் அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றமாகும்.  உச்ச நீதிமன்றத்தின் கீழ் தான் மற்ற அனைத்து நீதிமன்றங்களும் செய்லபடுகின்றன.

ஒவ்வொரு நீதி மன்றங்களிலும் ஒரு தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இருக்கின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையினை இந்திய ஜனாதிபதி வரையறுக்கின்றார்.

இந்தியாவின் மிக பழமையான உயர் நீதி மன்றம்கல்கத்தா நீதிமன்றம். இது 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்த ஆண்டே பம்பாய் மற்றும் மெட்ராஸ் உயர் நீதி மன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன.

புதிய உயர் நீதிமன்றம்தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றங்கள் புதிதாக 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள் இந்தியாவின் மூன்று பட்டய உயர் நீதிமன்றங்கள் ஆகும்.

இந்தியாவில் மொத்தமாக 25 உயர் நீதி மன்றங்கள் உள்ளன.

மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉 இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம்!

இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் பட்டியல் – 2023

இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் பட்டியல் – 2023
வரிசை எண்  பெயர்  அமைவிடம்  சட்ட ஆட்சி எல்லை நிறுவப்பட்ட ஆண்டு
1 தெலுங்கானா ஹைதராபாத் தெலுங்கானா 2019
2 ஆந்திரப் பிரதேசம் அமராவதி ஆந்திரப் பிரதேசம் 2019
3 மேகாலயா ஷில்லாங் மேகாலயா 2013
4 மணிப்பூர் இம்பால்  மணிப்பூர் 2013
5 திரிபுரா அகர்தலா  திரிபுரா 2013
6 ஜார்கண்ட் ராஞ்சி  ஜார்கண்ட் 2000
7 உத்தரகாண்ட் நைனிடால்  உத்தரகாண்ட் 2000
8 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் சத்தீஸ்கர் 2000
9 சிக்கிம் காங்டாக் சிக்கிம் 1975
10 ஹிமாச்சல பிரதேசம் சிம்லா ஹிமாச்சல பிரதேசம் 1966
11 டெல்லி டெல்லி டெல்லி 1966
12 குஜராத் அகமதாபாத் குஜராத் 1960
13 கேரளா எர்ணாகுளம் கேரளா & லட்சத்தீவு 1958
14 மத்திய பிரதேசம் ஜபல்பூர் மத்திய பிரதேசம் 1956
15 ராஜஸ்தான் ஜோத்பூர் ராஜஸ்தான் 1949
16 ஒரிசா கட்டாக் ஒரிசா 1948
17 கவுகாத்தி குவஹாத்தி அசாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் 1948
18 பஞ்சாப், ஹரியானா சண்டிகர் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் 1947
19 ஜம்மு & காஷ்மீர் ஸ்ரீ நகர் & ஜம்மு ஜம்மு & காஷ்மீர் 1928
20 பாட்னா  பாட்னா பீகார் 1916
21 கர்நாடகா  பெங்களூரு கர்நாடகா 1884
22 அலகாபாத்  அலகாபாத் உத்திரபிரதேசம் 1866
23 சென்னை  சென்னை தமிழ்நாடு, பாண்டிச்சேரி 1862
24 பம்பாய்  மும்பை மகாராஷ்டிரா, தாதர் மற்றும் நகர் ஹவேலி. கோவா 1862
25 கொல்கத்தா  கொல்கத்தா  மேற்கு வங்காளம், அந்தமான், நிக்கோபார் தீவுகள். 1862


மேலும் ஒரு பயனுள்ள தகவல்
👉
 
நீதிமன்ற தீர்ப்பை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது ரொம்ப ஈஸிங்க..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement