2023-ல் 1000 சதுர அடியில் வீடு கட்ட ஆகும் செலவு எவ்வளவு..?

Advertisement

How Much to Build a 1000 sq ft House 

ஒரு வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்கு முதலில் நிலையான திட்டம் என்பது அவசியம். ஏனென்றால் ஒரு திட்டம் இருந்தால் மட்டுமே வீடு கட்டுவதற்கான அடுத்தக்கட்ட நிலையினை நாம் சரியான முறையில் எடுத்து செல்ல முடியும். அவ்வாறு பார்த்தால் ஒரு வீடு கட்ட எவ்வளவு தோராயமாக செலவு ஆகும் என்பது வரையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இன்று 1000 சதுர அடியில் ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் அது எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வீடு கட்ட என்ன பொருள் வேண்டும்:

புதிதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு மணல், ஜன்னல், சிமெண்ட், ஜல்லி, மரப்பொருட்கள், பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான இதர பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவு, எஃகு, மின்சாரதிற்கு தேவையான பொருட்கள், தண்ணீர் வசதி அமைப்பதற்கான பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களும் பொதுவான ஒன்று.

1000 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு 2023:

 1000 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு 2023

தேவைப்படும் சிமெண்ட் (1000 sq ft):

1000 sq ft அளவில் உள்ள இந்த வீடு கட்டுவதற்கு 400 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமாக 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி என்றால் 400 மூட்டை சிமெண்ட் வாங்க 1,60,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.

தேவைப்படும் ஜல்லி (1000 sq ft):

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதில் ஒன்று 3/4 அளவில் உள்ள மற்றும் 1 1/2 அளவில் உள்ள ஜல்லி தேவைப்படும்.

1 1/2 அளவு ஜல்லி:

1 1/2 அளவில் (40 mm aggregate) ஜல்லியானது மொத்தம் 4 யூனிட் தேவைப்படும். 1 யூனிட் ஜல்லியின் விலை 2,800 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே 4 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 11,200 ரூபாய் தேவைப்படும்.

3/4 அளவு ஜல்லி:

1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் 3/4 அளவில் (20 mm aggregate) உள்ள ஜல்லியில் 10 யூனிட் தேவைப்படும். 1 யூனிட்டின் விலை 3,000 ரூபாய் என்றால் 10 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு 30,000 ரூபாய் தோராயமாக தேவைப்படும்.

தேவைப்படும் கம்பி (1000 sq ft):

1000 சதுர அடி வீடு

கம்பி 1000 sq ft அளவிலான வீடு கட்டுவதற்கு 5 டன் தேவைப்படும். 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அப்படி என்றால் 5 டன் கம்பியின் விலை தோராயமாக 3,75,000 ரூபாய் தேவைப்படும்.

தேவைப்படும் மணல் (1000 sq ft):

P சாண்ட் மணல்:

P சாண்ட் மணலானது மொத்தமாக 6 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் P சாண்ட் மணலின் விலை 5000 ரூபாய் என்று தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் மொத்தமாக 6 யூனிட் P சாண்ட் மணலிற்கு 30,000 ரூபாய் தேவைப்படும்.

M சாண்ட் மணல்:

அதுவே M சாண்ட் மணல் 20 யூனிட் தேவைப்படும். அப்படி என்றால் ஒரு யூனிட் மணலின் விலை 3,800 ரூபாய் என்றால் தோராயமாக 76,000 ரூபாய் தேவைப்படும்.

தேவைப்படும் செங்கல் (1000 sq ft):

1000 சதுரடியில் உள்ள வீடு கட்ட 22,000 செங்கல் தேவைப்படும். ஒரு செங்கலின் விலை 11 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதால் தோராயமாக செங்கல் வாங்குவதற்கு 2,42,000 ரூபாய் தேவைப்படும்.

இதில் சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வீடு கட்டுவதற்கான அடிப்படை பொருட்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருட்களை வாங்கும் போது அதனுடைய விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

1000 சதுர அடியில் உள்ள வீட்டினை கட்டுவதற்கான தோரயமாக கையில் வைத்து கொள்ள வேண்டிய தொகை என்றால் 20,00,000 ஆகும்.

இவற்றை இல்லாமல் இன்னும் வீட்டிற்க்கு தேவையான இதர பொருட்கள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement