Aadhar Card for Child Below 5 Years Online
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆதார் அட்டை நமக்கு எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவர்க்கும் ஆதார் அட்டை அடையாளமாக திகழ்கிறது. ஆகையால், பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி.? என்பதைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
ஆதார் அட்டை ஒரு தனி நபரின் இடம், பெயர், முகவரி, புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி ரேகைகள் போன்ற விவரங்களை கொண்டுள்ளது. அணைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதே இதன் பயன் ஆகும். முக்கியமாக, வங்கி கணக்கு திறப்பதற்கு, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல தேவைகளுக்கு பயன்படுகிறது.
How to Apply Aadhar Card for New Born Child in Tamil:
பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெருவதன் மூலம், ஒரு குழந்தையின் அடையாளத்தை நிரூபிப்பதற்கும், பல்வேறு விதமான அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான பலன் பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. ஆகையால், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
UIDAI இன் படி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு தேவை இல்லை. அதற்கு மாறாக பெற்றோரின் புள்ளிவிவர தகவல்கள் மற்றும் புகைப்படத்தின் அடிப்படையில் ஆதார் செயலாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். எனினும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெறுவதற்கான செயல்முறை வேறுபடுகிறது.அதனை பற்றி பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.?
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களது ஆதார் அட்டையை பயன்படுத்தி குழந்தைக்கான ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம். இதில் குழந்தையின் இடம் சார்ந்த தகவல் மற்றும் புகைப்படத்தை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீங்கள் பதிவு செய்யும் ஆதார் அட்டையை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன் பின்பு, வழக்கமான பயோமெட்ரிக் தகவல்கள் தேவைப்படும்.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்க நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை தேவையான ஆவணங்களுடன் அணுக வேண்டும். பதிவு செய்த பிறகு 30 நாட்களுக்குள் உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை வந்துவிடும்.
தேவையான ஆவணங்கள்:
- குழந்தையின் றப்பு சான்றிதழ்
- பெற்றோரின் ஆதார் அட்டைகள்
ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.?
- முதலில், தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து தயாராக வைத்து கொள்ளுங்கள்.
- அடுத்து, UIDAI என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Get Aadhaar என்பதை அறிந்து அதன் கீழ் இருக்கும் Book an Appointment கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- ஆட்டத்தில், உங்கள் location -ஐ தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, New Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, மொபைல் எண்ணை உள்ளிட்டு Generate OTP என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
- Personal Details என்பதில் தேவையான அனைத்து விவரங்களையும் கொடுத்து Proceed என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- இறுதியாக Submit என்பதை கிளிக் செய்து விடுங்கள். அதன் பின்பு ஆதார் நீங்கள் தேர்வு செய்த ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று உங்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பதிவுசெய்தல் பணியை முடிக்கவும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — | Today Useful Information In Tamil |