How to Apply Community Certificate in Tamil..! | சாதி சான்றிதழ் Online Apply | Community Certificate Apply Documents in Tamil
வணக்கம். இன்று நாம் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடி மிக எளிதாக சாதி சான்றிதழ் அப்ளை செய்து பெறுவது எப்படி என்று பார்க்கலாம். சாதிகள் இல்லையடி பாப்பா நம்ம பாரதியார் சொன்னாலும். சாதாரணமாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு துறைகளில் பணிபுரிவதற்கு என்று பல விஷயங்களுக்கு இன்று வரை நம்மிடம் கேட்கும் ஒரு சான்றிதழாக ஜாதி சான்றிதழ் இருக்கின்றது. இத்தகைய சான்றிதழை தமிழ்நாடு அரசு வழங்கும் இ சேவை இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடி அப்ளை செய்து பெறுவது எப்படி என்று இப்பொழுது நாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி? |
How To Apply Community Certificate in Online / ஆன்லைனில் சாதி சான்றிதழ் பெறுவது எப்படி?
சாதி சான்றிதழ் பெறுவது எப்படி ஸ்டேப்: 1
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
How To Apply Community Certificate in Online Step: 2
அவற்றில் Citizen Login வழியாக தங்களுடைய ID-ஐ Login செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
Department Services-யில் Revenue Department என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இந்த Revenue Department-ஐ கிளிக் செய்த பிறகு அவற்றில் என்ன Services இருக்கிறது என்று list காட்டப்படும். அவற்றில் Community certificate என்பதை கிளிக் செய்யுங்கள்.
How to Apply Community Certificate in Tamil Step: 4
இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு விண்டோ திறக்கப்படும் அவற்றில் இந்த சாதி சான்றிதழ் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், விண்ணப்பிக்க கட்டணம் போன்ற விவரங்கள் காட்டப்படும் அவற்றை தெளிவாக படித்துவிட்டு பின் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
How to Apply Community Certificate in Tamil Step: 5
இப்பொழுது Can நம்பர் பதிவு செய்ய வேண்டும். எனவே Registrar Can என்பதை கிளிக் செய்யவும். தங்களுடனுடைய Can Number-ஐ Registrar செய்து கொள்ளுங்கள். தாங்கள் ஏற்கனவே Registrar செய்திருந்தால் அந்த Can Number-ஐ டைப் செய்து processd என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? |
சாதி சான்றிதழ் பெறுவது எப்படி ஸ்டேப்: 6
இப்பொழுது சாதி சான்றிதழ் விண்ணப்பிக்க ஒரு விண்ணப்ப படிவம் Open ஆகும். அவற்றில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தும் இருக்கும், அதாவது நாம் Can Number Registrar செய்யும் பொழுது நமது விவரங்கள் அனைத்தும் உள்ளிட்டு தான் Can Number-ஐ Registrar செய்திருப்போம், எனவே இந்த விண்ணப்ப படிவத்தில் தாங்கள் தங்களுடைய தந்தை மற்றும் தாயின் சாதியை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன் பிறகு தங்கள் தந்தை மற்றும் தாய் ஆன்லைனில் சாதி சான்றிதழ் விண்ணப்பித்து பெற்றுள்ளனரா என்று கேட்கப்பட்டிருக்கும். ஆம் என்றால் Yes என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அவர்களுடைய சாதி சான்றிதழின் எண்ணினை டைப் செய்ய வேண்டும். இல்லை என்றால் No என்ற ஆப்ஷனை கிளிக் செய்து submit என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
How to Apply Community Certificate in Tamil Step: 7
submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு Document Attached என்கின்ற பேஜ் திறக்கப்படும். அவற்றில் விண்ணப்பதாரரின் புகைப்படம், Address proof, Self Declaration From மற்றும் தங்களுடைய தந்தை அல்லது தாயின் Community Certificate-ஐ Upload செய்ய வேண்டியதாக இருக்கும்.
எனவே தங்களுடைய ஒவ்வொரு ஆவணங்களையுயம் Select Document பக்கத்தில் இருக்கும் Select என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஒவ்வொன்றாக Upload செய்யுங்கள்.
குறிப்பு:
- விண்ணப்பதாரரின் Declaration from-ஐ Upload செய்ய வேண்டும், எனவே Download Declaration From என்று இருக்கும் அதனை கிளிக் செய்து Download செய்து விண்ணப்பதாரர்களிடம் கையொப்பம் வாங்கி திரும்ப ஸ்கேன் செய்து வைத்து கொள்ளுங்கள்.
- தாங்கள் upload செய்யும் ஆவணங்களின் size 200 kb இருக்க வேண்டும், அதுவே photo வாக இருந்தால் size 50 kb இருக்க வேண்டும்.
- File Format JPG, GIF, PDF, PNG போன்ற Format மூலம் மட்டுமே upload செய்ய முடியும்.
சாதி சான்றிதழ் பெறுவது எப்படி ஸ்டேப்: 8
இந்த சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கு தாங்கள் தமிழ்நாடு அரசுக்கு ரூ.60 கட்டண தொகை செலுத்தவேண்டியதாக இருக்கும். எனவே Make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தாங்கள் தங்களுடைய விண்ணப்ப கட்டனைத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதாவது தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் போன்றவற்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்களுடைய கட்டணத்தொகையை செலுத்தி கொள்ளலாம்.
How to Apply Community Certificate in Tamil Step: 9
கட்டண தொகை செலுத்திய பிறகு தங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும் அவற்றில் தங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணினை பயன்படுத்தி தான் இந்த https://www.tnesevai.tn.gov.in/ இணையதளத்தில் தங்களுடைய Status எப்படி உள்ளது என்று பார்க்கமுடியும்.
அதாவது இ சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Check Status என்பதில் தங்களுடைய விண்ணப்ப எண்ணினை டைப் செய்து Fetch என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது தங்களுடைய status எப்படி உள்ளது என்று காட்டப்படும். அதாவது தங்களுக்கு Application Approved ஆகியிருந்தால் Certificate என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து தங்களுடைய சாதி சான்றிதழை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
அவ்ளோதாங்க இதுக்காக அரசு அலுவலகத்திற்கு சென்று நாள்கணக்காக அலையவேண்டிய அவசியம் இருக்காது, வீட்டுல இருந்தபடியே மிக எளிதாக நமக்கு தேவையான சான்றிதல்களை இந்த தமிழக அரசின் இ சேவை மையத்தின் இணையதளத்தில் அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |