How To Apply FSSAI Certificate in Tamilnadu Online
இக்காலத்தில் வேலைக்கு செல்வதை விரும்புவதை விட சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் தான் அதிகம். அப்படி சுயதொழில் தொடங்குபவர்களுக்கு தேவைப்படும் முதலீடு என்பது ஒருபக்கம் இருந்தாலும், சுயதொழில் தொடங்குபவர்கள் அனைவரும் சில முறைகளை கடைபிடிக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது FSSAI சான்றிதல். ஆமாங்க, உணவு சம்மந்தப்பட்ட தொழில் எதுவாயினும் அதற்கு முக்கியமாக FSSAI தேவை. ஆகவே, உணவு சம்மந்தப்பட்ட தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் FSSAI சான்றிதழ் வாங்குவது மிகவும் அவசியம்.
FSSAI சான்றிதழ் என்பதன் விரிவாக்கம் Food Safety and Standards Authority of India ஆகும். இதனை தமிழில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் என்று கூறுவார்கள்.
FSSAI சான்றிதழ் பெற இரண்டு வழிகள் உள்ளது. அதாவது, ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைன் முறை ஆகும். இந்த இரண்டு முறைகளில் விண்ணப்பிப்பதற்கு பல முறைகள் உள்ளது. எனவே, அந்த வகையில் FSSAI சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Apply Fssai Certificate in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்கள் போன் அல்லது கணினியில் FoSCoS இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டேப் -2
அப்பகத்தில் உள்ள ‘Apply License/Registration’ என்ற ஆப்ஷனை கிளி செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் 👉 ஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி.?
ஸ்டேப் -3
அடுத்து, General என்று இருக்கும் சிகப்பு நிற பாக்ஸை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் -4
இப்போது அந்த பக்கத்தில் உள்ள Select State என்ற ஆப்ஷனை கிளி செய்து tamilnadu என்பதை கிளிகே செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
அடுத்து ‘Manufacturer’ ‘Trade/Retail’, அல்லது ‘Food Services’ என்பதில் உங்கள் தொழிலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, ‘Proceed’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
அடுத்த பக்கத்தில் உள்ள ‘Click here to apply for Registration for all businesses’ அல்லது ‘Click here to apply for State License for all businesses’ என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -7
இப்போது, Form A அல்லது Form B -யில் உங்கள் தொழிலுக்கான விவரங்கள் அனைத்தும் கொடுத்து பதிவேற்றம் செய்ய பணம் செலுத்துங்கள்.(upload the documents and make payment)
ஸ்டேப் -8
அடுத்து, இறுதியாக ‘Submit’ என்ற பட்டனை கிளிக் செய்து விடுங்கள்.
இப்போது FSSAI பதிவு விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்படும். அடுத்து FSSAI அதிகாரிகள் அதை ஆய்வு செய்வார்கள். விண்ணப்பதாரர் FSS சட்டத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து FSSAI அடிப்படைப் பதிவு அல்லது FSSAI மாநில உரிமத்தை அவர்கள் வழங்குவார்கள்.
வங்கியில் செல்லான் விண்ணப்பிப்பது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |