பல வருடங்களுக்கு முன் இறந்த தாத்தா, பாட்டிக்கு இறப்பு சான்றிதழ் எப்படி வாங்க வேண்டும்?

How to Apply Old Death Certificate in Tamil

How to Apply Old Death Certificate in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமது பதிவில் பல வருடத்திற்கு முன்பு இறந்த தாத்தா, பாட்டிக்கு இறப்பு சான்றிதழ் எப்படி வாங்குவது குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன்பு இந்த இறப்பு சான்றுதல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் மரணம், உண்மை மற்றும் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க ஆவணமாகும். இறப்பு பதிவு என்பது நபரின் இறப்பு நேரத்தையும் தேதியையும் நிரூபிப்பது, சமூக, சட்ட மற்றும் உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்து தனிநபரை விடுவிப்பது, சொத்து வாரிசைத் தீர்ப்பது மற்றும் குடும்பம் காப்பீடு மற்றும் பிற பயன்பாட்டிற்காக சேகரிக்க உதவுகிறது. அனைத்து இறப்புகளும் நிகழ்ந்த இடத்தில் 21 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். சரி இந்த பதிவில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறையைப் பார்ப்போம்.

பல வருடங்களுக்கு முன் இறந்த தாத்தா, பாட்டிக்கு இறப்பு சான்றிதழ் எப்படி வாங்க வேண்டும்?

குறிப்பு:

உங்களுக்கு இறப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் எந்த வருடத்தில் இறந்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இறப்பு சான்றிதழ் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது அதனை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும்  செய்து படியுங்கள் 👇
வில்லங்க சான்றிதழ் ஆன்லைனில் இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

வழிமுறை: 1

ஒருவர் இறந்து ஒரு வருடத்திற்குள் இருக்கும் என்றால், உங்கள் ஊரில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் அதாவது VAO அவர்களிடம் சென்று இறப்பு சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். அதாவது அங்கு உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் தருவாங்க அதனை பூர்த்தி செய்து விண்ணப்பித்தீர்கள் என்றால் உங்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

வழிமுறை: 2

ஒருவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அதாவது ஒரு வருடம் முதல்  ஐந்து வருடத்திற்குள் இருந்தால் அவர்கள் VAO-விடம் இறப்பு சான்றிதழ் வாங்க முடியாது. அதற்கு பதிலாக வட்டாட்சியரை தான் அணுக வேண்டும். அங்கும் உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும் அதனை பூர்த்தி செய்து விண்ணப்பித்தல் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

வழிமுறை: 3

ஒருவர் இறந்து 5 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றால், நாம் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தான் இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க வேண்டியதாக இருக்கும்.

இதையும்  செய்து படியுங்கள் 👇
ஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil