RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு எப்படி அப்ளை செய்வது..? முழு விவரம் இதோ..!

Advertisement

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் Tamilnadu RTE Admission பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக RTE என்பது Right to Education என்று சொல்லப்படுகிறது. அதாவது தமிழ்நாடு பள்ளி கல்வி துறையானது, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இலவச கல்வியைப் பெற இந்த சேர்க்கையின் கீழ் விண்ணப்பிக்கலாம். எனவே இந்த பதிவின் வாயிலாக RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கை விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

RTE Tamilnadu Admission 2024-25: 

பொதுவாக தமிழ்நாட்டில் RTE (Right to Education) சேர்க்கையின் முக்கிய நோக்கம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச மற்றும் தேவையான கல்வியை வழங்குவதே ஆகும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்குகிறது.

இந்த RTE சட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகள், பொதுவாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்கள் அல்லது மக்கள் தொகையின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தனியார் உதவிபெறாத பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2024 ஆகும். 

ஆகவே RTE சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். அதில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை அடங்கும். மேலும் தேவையான ஆவணங்களை கீழே காணலாம்.

இலவச கல்விக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி: 

  • விண்ணப்பிக்கும் குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • தமிழக குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
  • மாணவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள், அனாதைகள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டவர்கள், அரசு அலுவலகங்களில் வேலை செய்யாத துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்கள் இந்த கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

சாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி

தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு தேவைப்படும் ஆவணங்கள்: 

நீங்கள் RTE தமிழ்நாடு இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நினைத்தால் சில ஆவணங்களை விண்ணப்பப்படிவத்துடன் இணைக்க வேண்டும்.

  • மாணவர் புகைப்படம் (150pc X175 px)
  • பிறப்புச் சான்றிதழ்
  • முகவரி சான்று (ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் பல)
  • ஜாதி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • பிபிஎல் சான்றிதழ்
  • குடியிருப்பு சான்றிதழ்
  • எச்.ஐ.வி பாதித்த அறிக்கைகள்
  • அனாதை சான்றிதழ்
  • திருநங்கை சான்றிதழ்

RTE Tamilnadu Admission Apply Online in Tamil: 

ஸ்டேப் -1 

RTE Tamilnadu Admission Apply Online

முதலில் உங்கள் போனில் இருக்கும் Google இல் https://rteadmission.tnschools.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டேப் -2

RTE Tamilnadu Admission Apply Online

அதில் மேலே View School List என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளியில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த பள்ளியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டேப் -3

பின் அதில் Home என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வெளியில் வர வேண்டும். அங்கு Start Application என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

அதில் உங்களுடைய குழந்தையின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதில் கேட்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தையின் விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். பிறகு கீழ் இருக்கும் Save என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் -4

அடுத்து பெற்றோரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதையும் சரியாக உள்ளிட வேண்டும். அதுபோல உங்களின் வீட்டின் முகவரி (Address Details) கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் -5

பின் Documents என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்கள் குழந்தையின் புகை படம், வருமான சான்று போன்ற ஆவணங்களின் படங்களை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் -6

பின் இறுதியாக Select School என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வரும். அதில் நீங்கள் எந்த பள்ளியில் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த பள்ளியின் பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -7

பின் Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இறுதியாக நீங்கள் கொடுத்த விவரங்கள் தோன்றும். அதை சரி பார்த்து கொள்ளவும். அதன் பிறகு Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடைய மொபைலிற்கு ஒரு SMS வரும். நீங்கள் இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டீர்கள் என்று. அவ்வளவு தான்.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement