ஆன்லைனில் தமிழக அரசின் ஆற்று மணல் பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் மணல் புக்கிங் செய்வது எப்படி? | How to Apply TN River Sand Booking Online in Tamil 2022

பொதுமக்களின் நலன் கருதி அவர்கள் புதிதாக வீடு கட்டுவதற்கோ, வீட்டினை பழுது பார்ப்பதற்கோ, மற்ற கட்டிட பணிகளை சிரமம் இல்லாதவாறு செய்து முடிப்பதற்கு நம் தமிழக முதல்வர் எளிமையாக ஆற்று மணலை ஆன்லைன் வழியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளார். மணல் பதிவானது காலை 8 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலும் பொதுமக்களுக்கு அவர்கள் புக்கிங் செய்தபடி மணல் விநியோகம் செய்யப்படும். மீதமுள்ள மணலை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும் என்று முதல்வரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் ஆற்று மணலை புக்கிங் செய்து அதற்கான பணத்தையும் ஆன்லைனிலே எளிமையாக செலுத்துவதற்கு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாங்க ஈசியாக ஆன்லைன் மூலம் முன்னதாகவே ஆற்று மணலை எப்படி புக்கிங் செய்து பெறலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம்..

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது

மணல் பதிவு செய்வது எப்படி Step: 1

முதலில் கூகுள் க்ரோமில் tnsand என்பதை டைப் செய்துக்கொள்ளுங்கள். டைப் செய்ததும் முதலில் வரும் லிங்கை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

மணல் பதிவு செய்வது எப்படி Step: 2

இது மாதிரியான பக்கம் ஓபன் ஆகும். இந்த திட்டத்தை சில Apps வழியாகவும் நீங்கள் apply செய்து பெறலாம். அதற்கான சிறப்பம்சங்களை அவர்களே கொடுத்துள்ளார்கள்.

மணல் பதிவு செய்வது எப்படி 2022 Step: 3

 

இப்போது பொதுமக்கள் என்பதை கிளிக் செய்யவும். (இந்த முறையானது பொதுமக்களுக்கு) 

தமிழ்நாடு மணல் இணைய சேவை 2022 Step: 4

கிளிக் செய்ததும் புக்கிங் செய்வதற்கான பக்கம் ஓபன் ஆகும். இவற்றில் New Booking என்பதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். Quarry என்பதில் உங்களுக்கு அருகாமையில் உள்ள ஏரியாவை செலக்ட் செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து Vehicle type (lorry-யா, டெம்போ எது உள்ளதோ தேர்வு செய்துகொள்ளுங்கள்).

new7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

Step: 5

அடுத்து வாகனத்தின் பதிவு எண், வாகனத்தினுடைய எடை, வாகனம் காலியாக இருக்கும் போது எவ்வளவு எடை இருக்கிறதோ அதனுடைய எடை, தேவைப்படும் மணல் யூனிட், வண்டியின் Chasis எண், Engine எண், உறுப்பினர் பெயர், தொலைபேசி எண், ஊரின் பின்கோடு, வசிக்கும் ஏரியா பெயர், மாவட்ட பெயர், முகவரி, கீழே இருக்கக்கூடிய Captcha எண்ணை அந்த பாக்சில் சரியாக டைப் செய்யவும்.

ஆற்று மணல் online booking Step: 6

Captcha எண்ணை டைப் செய்ததும் I agree என்ற கட்டத்தில் டிக் கொடுத்து agree என்பதை கொடுக்கவும். அடுத்து Create Booking என்பதை கொடுக்க வேண்டும்.

மணல் குவாரி online booking Step: 7

அடுத்து Payment பேஜ் ஓபன் ஆகும். ஆற்று மணலானது ஒரு யூனிட் ரூ. 1,000/-. நீங்கள் payment செய்ததும் உங்களுக்கு QR code வரும். வந்திருக்கின்ற QR கோடினை அவர்களிடம் காட்டினால் உங்களுக்கு தேவையான ஆற்றுமணலை பெற்றுக்கொள்ளலாம்.

லாரி ஓட்டுநர்களுக்கு 

Step: 8

உள்நுளை என்பதை கிளிக் செய்யவும்.

Step: 9

Not Registered yet Here என்பதை கொடுத்து புதிதாக ஓபன் செய்துக்கொள்ளுங்கள்.

Owner Registration செய்வதற்கு அவற்றில் கேட்டுள்ள விவரங்களை பதிவிட்டு என்டர் செய்துக்கொள்ளலாம்.

 

மணல் அள்ளுவதற்கான வாகனத்தை நீங்கள் முன் பதிவு செய்திருந்தால் மணலை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு வாகன பதிவு என்பதை கிளிக் செய்யவும்.

 

கிளிக் செய்ததும் Vehicles Details என்ற பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் கேட்டுள்ள விவரங்களுக்கு சரியானவற்றை உள்ளீட்டு கீழே சப்மிட் செய்தால் போதும். நீங்கள் மணல் குவாரியில் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களுடைய QR கோடினை ஸ்கேன் செய்து மணலை கொடுத்துவிடுவார்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil