கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய இத்தனை வழி இருக்கா!! இது தெரியாம போச்சே..! How to Book Cylinder Through Other Ways in Tamil..!
How to Book Cylinder Through Other Ways in Tamil – பொதுவாக இப்போது அனைவரது வீட்டிலேயும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகின்றோம். வீடுகள் மட்டும் இல்லாமல் ஹோட்டலுக்கு கேஸ் சிலிண்டரை மிகவும் பயன்படும் ஒன்றாகும். இந்த கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் சிலிண்டர் தீர்த்தவுடன் அதனை புக்கிங் செய்வதற்கு நிறைய குழப்பம் இருக்கும். இன்னும் பலருக்கு கேஸ் சிலிண்டர் எப்படி புக்கிங் செய்வது என்று கூட தெரிவதில்லை. மேலும் பலர் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய ஒரு வழி மட்டும் தான் உள்ளது என்று நினைத்துக்கொண்டு உள்ளனர். உண்மையில் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய ஒரு வழி மட்டும் தான் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. இதற்கு நிறைய வழிகள் உள்ளது. அதனை பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோமா.
வெப்சைட்:
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய விரும்புபவர்கள். உங்கள் கேஸ் சிலிண்டரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கூட கேஸ் புக்கிங் செய்யலாம். உதாரணத்திற்கு பார்த் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய நினைப்பவர்கள் https://my.ebharatgas.com/bharatgas/Home/Index. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ‘Quick Book & Pay’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். பிறகு அவற்றில் உங்கள் சிலிண்டர் ID நம்பர் மற்றும் மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு ’Continue’ கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்து உங்கள் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்துகொள்ளலாம்.
பேடிஎம் ஆப்:
நீங்கள் பேடிஎம் ஆப் பயன்படுத்துபவர் என்றால் அவற்றில் கூட கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். அதாவது பேடிஎம் ஆப் ஓப்பன் செய்து அவற்றில் ‘Book Gas Cylinder’ என்ற ஆப்ஷனில் சென்று சிலிண்டர் ID நம்பர் மற்றும் மொபைல் நம்பர் பதிவிட்டு புக்கிங் செய்யலாம். பணம் செலுத்தும் முறையும் இதில் மிக எளிதாக இருக்கும்.
ஃப்ரீசார்ஜ்:
பேடிஎம் போன்று நீங்கள் ஃப்ரீசார்ஜ் மொபைல் ஆப்பிலும் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும். ‘Book a Cylinder’ ஆப்சனில் சென்று நீங்கள் சிலிண்டர் வாங்கும் ஏஜென்ஸியை தேர்ந்தெடுத்து மொபைல் நம்பரைக் கொடுத்து பேமெண்ட் செய்தால் சிலிண்டர் புக் செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேஸ் சிலிண்டர்ல இனி இந்த நம்பரை செக் பண்ணாமல் சிலிண்டர் வாங்கிடாதீங்க..!
SMS:
இதற்கு உங்கள் மொபைல் எண்ணை சிலிண்டர் நிறுவனத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த நம்பரில் இருந்துதான் புக்கிங் செய்ய முடியும். கேஸ் வாங்கும் நிறுவனத்தின் பிரத்தியேகமான மொபைல் நம்பருக்கு SMS அனுப்புவதன் மூலம் சிலிண்டரை புக்கிங் செய்யலாம்.
மிஸ்டு கால்:
மிஸ்டு கால் மூலமாக கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது மிகவும் சுலபமான முறையாக இருக்கும். பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து கேஸ் நிறுவனத்தின் சேவை எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டு விடும்.
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகளிலும் நீங்கள் மிக எளிதாக கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு மேல் கூறப்பட்டுள்ள வழிகளில் எந்த வழி மிக எளிதாக இருக்குமோ அதனை தேர்வு செய்து கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யுங்கள் நன்றி வணக்கம்..
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |