பத்திர பதிவு செய்ய விடாமல் தடை மனு கொடுப்பது எப்படி?

Advertisement

தடை மனு அல்லது தாவா மனு என்றால் என்ன? – How to Cancel Registration Document in Tamil | தடை மனு கொடுப்பது எப்படி.?

ஒருவரை பத்திர பதிவு செய்ய விடாமல் தடை மனு கொடுக்க முடியும். அப்படி தடை மனு கொடுக்கும் பட்சத்தில் அந்த பத்திர பதிவை சார் பதிவாளர் பதிவு செய்ய கூடாது. அந்த தடை மனுவை நீங்கள் பெறுவதற்கு நிதிமாற்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதிக செலவும் செய்ய வேண்டிய தேவை இல்லை. உங்கள் ஊரில் உள்ள சார் பதிவாளர் பத்திர பதிவு துறை அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு எழுதி கொடுத்துவிட்டு வந்தாலே போதும். அவற்றை தான் இந்த சட்டமும் செல்கிறது. இந்த சட்டத்தை பற்றிய முழுமையான விளக்கத்தை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

தடை மனு கொடுப்பது எப்படி? – பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி? – Thadangal Manu Format in Tamil:

முதலில் ஒருவரை பத்திர பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்த தடை மனு எதற்காக கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். இதனுடைய நோக்கம் என்ன, இவற்றில் இருக்க கூடிய பலன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

யார் யார் எல்லாம் இந்த தடை மனுவை கொடுக்கலாம்?

  • உங்களிடம் ஒரு சொத்து இருக்கிறது, அந்த சொத்தில் பிரச்சனை இருக்கிறது ஒருவர் போலியாக அந்த சொத்திற்கு பத்திரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்றால். அவர்களை பத்திர பதிவு செய்ய விடாமல் நீங்கள் தாராளமாக தடை மனுவை பத்திர பதிவு துறையில் எழுதி கொடுக்கலாம்.
  • அதேபோல் உங்களிடம் ஒரு சொத்து இருக்கிறது நீங்கள் வெளி இடத்திற்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ செல்லப்போறிங்க, ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் வர போறீங்க என்று வைத்துக்கொள்வோம் அந்த இடைவேளையில் யாரோ ஒருவர் அந்த இடத்திற்கு பத்திர பதிவு செய்துவிடுவார்களோ என்று பயந்தீர்கள் என்றால் நீங்களும் பத்திர பதிவு துறையில் தடை மனு எழுதிக்கொடுத்துவிட்டு வரலாம்.
  • உங்கள் குடும்ப சொத்தில் பிரச்சனை இருக்கிறது உங்களுடைய பங்கை மறைத்து யாரிடமாவது விற்றுவிடுவார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் என்னுடைய பங்கை யாருக்கும் விற்றுவிட கூடாது என்று தடை மனுவை எழுதிக்கொடுத்திவிட்டு வரலாம்.
  • கூட்டு பட்டாவில் உங்களுடைய பெயர் இருந்து, உங்களுடைய பங்கை மறைத்து யாரிடமாவது விற்றுவிடுவார்களோ என்ற பயம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் இந்த தடை மனுவை பத்திர பதிவு துறையில் எழுதிக்கொடுத்துவிட்டு வரலாம்.

இதனுடைய பயன்கள் என்ன?

இந்த தடை மனுவின் பயன்கள் என்னவென்றால் சார் பதிவாளர் அந்த சொத்தை விற்பனை செய்யாமல் தடுத்திவிடுவார். ஆக உங்களுடைய அனுமதி இன்றி யாரிடமும் உங்களுடைய சொத்தை விற்பனை செய்ய முடியாது. உங்களுடைய உரிமை நிலைநாட்டப்படும்.

நோக்கம்:

  • எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்களிடம் ஒரு சொத்து இருக்கிறது அதனை வேறு ஒருவர் பத்திரம் செய்ய நினைக்கிறார் நீங்கள் ஒரு தடை மனு எழுதி கொடுத்துருக்கீங்க என்றால்.
  • அதனை சார்பதிவாளர் ஏற்றுக்கொண்டு, அதனை வேறு ஒரு நபர் பதிவு செய்ய வரும் பத்திரத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய கூடாது, சார் பதிவாளர் அதனை விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து யார் மீது நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் அந்த பத்திர பதிவு செய்யலாம் வேண்டாமா என்று சார் பதிவாளர் முடிவு எடுப்பார்கள்.
  • இந்த தடை மனுவை கொடுக்க வேண்டிய இடம், உங்கள் ஊரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் ஆகும்.

பத்திரப்பதிவு தடை மனு எழுதுவது எப்படி? – How to Cancel Registration Document in Tamil | தடை மனு மாதிரி

அனுப்புநர்:

மனுதாரர் பெயர் (வயது)
முகவரி.

பெறுநர்:

1 உயர்த்திரு: சார்பதிவாளர் அவர்கள்,
(ஊர்) சார்பதிவாளர் அலுவலகம்.
மாவட்டத்தின் பெயர்.

2 உயர்திரு: மாவட்ட பதிவாளர் அவர்கள்,
(ஊர்) மாவட்ட பதிவாளர் அலுவலகம்,
மாவட்டத்தின் பெயர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: ——- மாவட்டம் ——- வட்டம் —— கிராமம் சர்வே எண் —- உட்பட்ட சொத்தினை ——– பதிவு மாவட்டம் —– மாவட்டம் —- சார்பதிவாளர் அலுவகத்தில் பத்திரப்பதிவு தடை வேண்டுதல். தொடர்பாக

1. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனக்கு சொந்தமான தாவ சொத்தானது —- மாவட்டம் —– வட்டம் —– கிராமம் சர்வே எண் —- இல்; காட்டப்பட்ட —– ஏக்கர் —- சென்ட் இந்த சொத்தானது ஆதியில் —– அவர்களுக்கு பூர்விகமாக பாத்தியப்பட்ட சொத்தாகும். அதன் பிறகு மேற்படி சொத்தினை அவர் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகளான நான் மற்றும் ——-, ——-, ———, ஆகியோர் ஆண்டு அனுபவித்து வருகிறோம்.

2. மேற்படி சொத்தானது கூட்டு குடும்ப சொத்து, தாவா சொத்து உரிமை சம்பந்தமாக —- மாவட்டம் —- நீதிமன்றத்தில் OS —–/ —– வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உரிமையியல் வழக்கு நிறுவையில் இருப்பதை மறைத்து மேற்படி சொத்து சம்பந்தமான மற்ற வாரிசுகளோ அல்லது மூன்றாம் நபரோ சொத்துரிமை மாற்றம் செய்வதற்கு பத்திரப்பதிவு செய்ய முற்படுவதாக எனக்கு தெரியவந்து.

எனவே கணம் சமூகம் அவர்கள் அவ்வாறு யாரேனும் பத்திரப்பதிவு, அல்லது வேற எந்தவொரு சொத்துரிமை மாற்றம் செய்வதற்கு பத்திரப்பதிவுக்கு முற்பட்டால் அதை சமூகம் அவர்கள் ஏற்காமல் மேற்படி பத்திரத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டாம். என இந்த தடை மனு செய்வதன் மூலம் தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த தடை மனு எழுதும் போது மேற்படி மனுவுடன் அந்த சொத்து சம்பந்தமான உரிமை ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement