கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? – How to Change Kootu Patta to Individual Patta in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம் என்றால் கூட்டு பட்டவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்னென்ன, தனி பட்டாவாக மாற்றுவதற்கு நாம் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கூட்டு பட்டா என்றால் என்ன?
கூட்டு பட்டா என்பது ஒரு இடத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேல் உரிமையாளர்கள் இருந்தால் அதனை கூட்டு பட்டா என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்த இடத்தினுடைய பட்டா கூட்டு பட்டா என்று அழைக்கப்படுகிறது.
அதாவது கூட்டு பட்டாவில் உரிமையாளரின் பெயர் என்று போட்டு எத்தனை பேர் உரிமையாளரோ அவர்களுடைய பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஆக அவர்கள் தான் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிமையாளராக இருப்பார்கள்.
அதுவே தனி பட்டாவாக இருந்தால் அந்த தனிப்பட்ட நபருடைய பெயரில் தான் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிமையாளராக இருப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க RTI மனு எழுதுவது எப்படி?
சரி இந்த கூட்டு பட்டாவை எப்போது தனி பட்டாவாக மாற்ற முடியும் என்று பார்க்கலாம்.
How to Change Kootu Patta to Individual Patta in Tamil – உதாரணத்திற்கு ஒரு கூட்டு பட்டாவில் உள்ள ஐந்து நபர்களில் ஒருவர் மட்டும் அவருடைய நிலத்திற்கு தனி பட்டா வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் தனி பட்டா வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இந்த கூட்டு பட்டாவை மட்டும் வைத்து அவர்கள் தனி பட்டா வாங்கிவிட முடியாது. அதற்கு ஒரு சில ஆவணங்கள் எல்லாம் தேவைப்படும், அந்த ஆவணங்களுடன் இந்த கூட்டு பட்டாவையும் சேர்த்து விண்ணப்பிக்கும் போது தான் அவர்களுக்கு தனி பட்டா கிடைக்கும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்? – How to Transfer a Joint Patta Into an Individual Patta
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எங்கு விண்ணப்பிக்கலாம் என்றால் அதனை நீங்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். அதேபோல் நேரடியாக வட்டாச்சியர் அலுவலத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் என்றதும் நாமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது உங்கள் ஊரில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால்..
உங்கள் நிலத்தினுடைய பாகப்பிரிவினை பத்திரம் தேவைப்படும்.
உங்கள் நிலத்திற்கான FMB sketch அதாவது நில வைரப்படம். அதாவது சர்வேயரை அழைத்து வைத்து உங்கள் நிலத்தை மட்டும் அளந்து ஒரு நிலவரைபடம் வரைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த நிலத்தினுடைய ஆவணங்கள் நில பத்திரத்தின் நகல், ஆதார் கார்ட், உங்களுடைய புகைப்படம்,.
வாரிசு சான்றிதழ் (இந்த வாரிசு சான்றிதழ் யாருக்கு தேவைப்படும் என்றால், ஒரு இடத்திற்கு 5 பேர் கூட்டு பட்டாவாக வாங்கி அவற்றில் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு இந்த வாரிசு சான்றிதழ் தேவைப்படும்.)
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன? தெரிந்துகொள்ளுங்கள்..!
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவதற்க்கான வழிமுறைகள் – How to Change Kootu Patta to Thani Patta in Tamil
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதாக இருந்தால் உங்களுடைய கூட்டு பட்டா மற்றும் பாகப்பிரிவினை பத்திரத்தை எடுத்து செல்ல வேண்டும்.
அவர்கள் உங்களுக்கு அப்ளை செய்து தருவார்கள், பிறகு அந்த விண்ணப்பம் நேரடியாக உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும். அவர்கள் அந்த ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்ப்பார்கள்
பிறகு அவர் அந்த கூட்டு பட்டாவில் யார்யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் ஒரு லெட்டர் ஒன்று அனுப்புவார். அந்த லெட்டருக்கு மற்றவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால். அதன்பிறகு நேரடியாக VAO அலுவலகத்தில் உள்ள சர்வேயருக்கு அந்த விண்ணப்பத்தை ஃபார்வேட் செய்வார்கள்.
அதன்பிறகு சர்வேயர் வைத்து நீங்கள் எந்த இடத்திற்கு தனி பட்டா கேட்குறீர்களோ அந்த நிலத்தை மட்டும் அளந்து ஒரு FMB வரைபடம் போடுவார்கள், அதுபோக உங்கள் நிலத்திற்கும் ஒரு சப் டிவிஷன் எண் ஒன்று கொடுத்துவிடுவார்கள்.
தான்பிறகு உங்களுடைய அப்ளிகேஷன் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும், தாசில்தார் என்ன செய்வார்கள் என்றால் உங்கள் ஆவணங்களை ஒரு முறை சரிபாத்துவிட்டு உங்களுக்கு தனி பட்டா கொடுப்பார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |