PAN-Aadhaar இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் செய்வது எப்படி?
கடந்த சில வருடங்களாக வருமானவரித்துறை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை லிங்க் செய்ய வேண்டும் என்று பல எச்சரிக்கையை விடுத்தது. இருப்பினும் மக்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை ஆதாருடன் பான் கார்டை இணைக்க கால கெடு கொடுத்திருந்தது. அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்கள் பான் கார்டை எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது என்று வருமானவரித்துறை தெரிவித்தது. இந்நிலை பலருக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் ஆதாருடன் பான் கார்டு லிங்க் செய்யப்பட்டதா? இல்லையா? என்று பல குழப்பம் இருக்கிறது. உங்களுடைய குழப்பத்தை போக்கவே இந்த பதிவு, அதவாது பான் கார்ட்- ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என சரிபார்ப்பது எப்படி? என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ளப் போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்க ஆதார் கார்டு எப்போ எடுத்தீங்கனு தெரியுமா..? அதை உடனே Update செய்ய வேண்டுமாம்..!
How to Check Aadhaar Linked to Pan Card in Tamil:
முதலில் வருமானவரித்துறையின் https://eportal.incometax.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் Link Aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு அவற்றில் PAN மற்றும் Aadhaar Number இரண்டையும் உள்ளிட்டு Validate என்பதை கிளிக் செய்யுங்கள்.
Validate என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ஆதார் பான் எண்ணுடன் லிங்க் செய்யப்பட்டிருந்தால் Your PAN already linked to given Aadhaar என்று வரும். இவ்வாறு வரவில்லை என்றால் உங்கள் ஆதார் கார்டு பான் எண்ணுடன் லிங்க் ஆகவில்லை என்று அர்த்தம் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது…! அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |