பத்திரம் மற்றும் பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதை ஆன்லைனில் தெரிந்துக்கொள்வது எப்படி..?

Advertisement

How to Check in Whose Name a Property is Registered 

பொதுவாக நாம் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்றாலோ அல்லது விற்க வேண்டும் என்றாலோ அதற்கு பத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் பத்திரம் இருந்தால் மட்டுமே தான் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டினையும் செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பத்திரம் யாருடைய இருக்கிறது என்பதை நாம் அவசியமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலருக்கு இதனை எவ்வாறு தெரிந்துகொள்வது என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது. பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை நாம் மிகவும் எளிமையான முறையில் அதுவும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்துக்கொள்ளலாம். எனவே இன்றைய பதிவில் ஆன்லைன் மூலமாக பத்திரம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பத்திரம் என்றால் என்ன..?

பத்திரம் என்பது ஒரு நிலத்தினை குறிக்கும் மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். அந்த வகையில் நம்முடைய நிலத்தினை வேறு ஒருவர் உரிமை கொண்டாட முடியாது என்றும் என் நிலம் எனக்கு மட்டுமே உரிமை என்பதையும் சுட்டி காட்டுவதற்கு இன்றையமையாத ஒன்றாக உள்ளது. இதுவே பத்திரம் எனப்படும்.

ஆன்லைனில் பத்திரம் யார் பெயரில் உள்ளது என்று பார்ப்பது எப்படி..?

ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை ஆன்லைன் மூலமாக பார்ப்பதற்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதாவது https://tnreginet.gov.in/ என்ற இணையாளத்திற்குள் செல்லவும்.

 பத்திரம்

இப்போது இந்த பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சேவை என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் வில்லங்க சான்றிதழ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆன்லைன் மூலம் சிட்டா நகல் பெறுதல்

pathiram yar peyaril ulladhu

அதன் பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் வில்லங்க சான்று விவரங்கள் பார்வையிடுதல் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 பத்திரம் யார் பெயரில் உள்ளது

கடைசியாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும். அதில் வில்லங்கச் சான்று என்பதில் கேட்பட்டுள்ள விவரங்களை பதிவிடவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி

how to check land pathiram details in tamil

திருத்த இயலாநிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதை என்பதை கிளிக் செய்யவும். இவ்வாறு செய்தால் உங்களின் பத்திரம் தோன்றும். அதில் பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை பார்த்து விடலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement