பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

பித்தளை பாத்திரம்

பித்தளை பாத்திரத்தை பளபளக்க வைப்போம் வாங்க..!

பொங்கல் வேற வரபோது உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை பளபளக்க வைக்க வேண்டாமா? சரி பித்தளை பாத்திரம் விளக்குவதற்கு பொதுவாக என்ன நாம் பயன்படுத்துவோம்? குறிப்பாக புளிச்சக்கை அல்லது எலுமிச்சையை தான் அதிகமா பயன்படுத்துவோம். இவ்வாறு செய்வதினால் பாத்திரம் தான் ஜொலிஜொலிப்பாக இருக்கும். ஆனால் நம் கைகள் பொலிவிழந்து விடும்.

குறிப்பாக நம் கைகளில் கீறல்கள் உருவாக்கி எரிசலை கூட ஏற்படுத்தும். எனவே பித்தளை பாத்திரம் விளக்குவதற்கு புளி மற்றும் எலுமிச்சையை பயன்படுத்துவதற்கு பதிலாக… வித்தியாசமாக மைதா, உப்பு மற்றும் வினிகரை பயன்படுத்தி பித்தளை பாத்திரம் பளபளக்க செய்வோம் வாங்க…

இதையும் படிக்கவும்  கேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS

பித்தளை பாத்திரம் பளபளக்க

தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 2 ஸ்பூன்
  2. உப்பு – 3 ஸ்பூன்
  3. வினிகர் – தேவையான அளவு
  4. தேங்காய் எண்ணெய் – இரண்டு துளிகள்.

பித்தளை பாத்திரம் பளபளக்க ..!

பித்தளை பாத்திரம் பளபளக்க முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் மைதா மாவு, மூன்று ஸ்பூன் தூள் உப்பு மற்றும் சிறிதளவு வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு இந்த கலவையை பித்தளை பாத்திரத்தில் தேய்க்க வேண்டும்.

பின்பு 10 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு சாதாரணமாக இந்த பித்தளை பாத்திரத்தை தேய்த்து விளக்கி கழுவினால் போதும் உங்கள் பித்தளை பாத்திரம் பளபளக்கும்.

பாத்திரத்தை கழுவியதும் அவற்றில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்து விடவும்.

பின்பு ஒரு காட்டன் துணியயை எடுத்து கொள்ளவும் அவற்றில் இரண்டு துளிகள் தேங்காய் எண்ணெயை விட்டு, அவற்றை பித்தளை பாத்திரத்தில் தடவினால் போதும், பார்ப்பவர்கள் அனைவரும் புதுசா என்று கேப்பாங்க.

இந்த முறையை (செம்பு பாத்திரம் பளபளக்க) செம்பு பாத்திரங்களுக்கும் கூட பயன்படுத்தலாம்.

மேலும் இந்த முறையை நாம் பித்தளை பாத்திரத்துக்கு பயன்படுத்துவதினால், குறிப்பாக 15 நாட்கள் வரை பளபளப்பாகவே இருக்கும்.

இந்த குறிப்பு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

இதையும் படிக்கவும்  உப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com