ATM-ல் பணம் போடுவது எப்படி? | How to Deposit Money in ATM in Tamil
How to Deposit Money in ATM in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பலருக்கு ATM கார்டில் எளிதாக பணம் எடுக்க தெரியும். ஆனால் ATM மிஷினில் பணம் டெபாசிட் செய்ய தெரியாது. எப்போதாவது ATM மூலமாக பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்கின்ற போது தான் அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைப்பார்கள். ATM-ல் பணம் டெபாசிட் செய்வது மிக எளிதான செயல்முறை தான். அதனை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறோம். இருப்பினும் எல்லா வகையான ATM மெஷினில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. அதற்கான செட்டிங்ஸ் பொருத்தப்பட்ட ATM மெஷினில் மட்டுமே நீங்கள் பணம் டெபாசிட் செய்ய முடியும். அதேபோல் ஒவ்வொரு ATM-லும் ஒவ்வொரு வகையில் செட்டிங்ஸ் இருக்கும். இருந்தாலும் அனைத்து ATM இயந்த்த்திரத்திற்கும் ஒரே செயல் முறை தான். சரி வாங்க ATM-யில் பணம் டெபாசிட் செய்வது எப்படி? என்று படித்து தெரிந்துகொள்வோம்.
ATM-யில் கார்ட் மூலம் பணம் டெபாசிட் செய்வது எப்படி?
ஸ்டேப்: 1
எப்பொழுதும் போல் ATM மெஷினில் உங்கள் ATM கார்டை இன்செட் செய்யுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு மொழியை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு உங்கள் ATM கார்டின் Pin Number-ஐ உள்ளிடவும்.
ஸ்டேப்: 4
பின்பு Cash Deposit என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 5
பிறகு நீங்கள் டெபாசிட் இருக்கும் பணத்தை அந்த ATM இயந்திரத்தில் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் பணத்தை வைக்க வேண்டும்.
ஸ்டேப்: 6
பிறகு Confirm என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது பணம் டெபாசிட் ஆகியிருக்கும். மேலும் உங்களுக்கு ஒரு ரிசிப்ட் கிடைக்கும். பிறகு ATM கார்டை எடுத்துவிடுங்கள். அவ்வளவு தான் இதற்கான செயல்முறை.
ATM-யில் கார்ட் இல்லாமல் அக்கௌன்ட் நம்பர் மூலம் பணம் டெபாசிட் செய்யும் முறை – Cash Deposit Without ATM Card in Tamil:
ஸ்டேப்: 1
அக்கௌன்ட் மூலம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அந்தந்த வங்கியின் ATM மெஷினில் மட்டுமே பணம் டெபாசிட் செய்ய முடியும். உதாரணத்திற்கு Axis Bank என்றால் Axis Bank ATM மெஷினில் மட்டுமே பணம் டெபாசிட் செய்ய முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப்: 2
Axis Bank ATM மெஷினில் Transact Cardless என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு Card Less Deposit என்று ஒரு ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு மொழியை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
அதன் பிறகு நீங்கள் எந்த Account-க்கும் பணம் டெபாசிட் செய்ய வேண்டுமோ, அந்த Bank Account-யின் நம்பரை சரியாக உள்ளிடவும்.
ஸ்டேப்: 6
அதன்பிறகு Confirm என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். மீண்டும் அதே அக்கௌன்ட் நம்பரை உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 7
பின்பு நீங்கள் பணம் எவ்வளவு ரூபாய் வரை டெபிசிட் செய்யலாம் என்று வரும் அப்படி வந்தால் ATM மிஷினில் உள்ள மூன்றாவது பட்டனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 8
பிறகு நீங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் அந்த தொகையை ATM மெஷினில் வைக்கவும். பிறகு சிறிது நேரம் காத்திருக்கவும்.
ஸ்டேப்: 9
பிறகு நீங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளீர்கள் என்று வரும். அதன் பிறகு Confirm Deposit என்று கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தன உங்கள் பணம் டெபாசிட் ஆகிடும்.
குறிப்பு: மேல் கூறப்பட்டுள்ள இரண்டு வழிமுறைகளில் நீங்கள் டெபாசிட் செய்ய இருக்கும் பணம் கசங்கியோ, கிழிந்தோ இருக்க கூடாது அப்படி கசங்கி அல்லது கிழிந்து இருந்தால் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ATM மெஷினில் கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது? யாரை அணுக வேண்டும்? எவ்வாறு மாற்றுவது?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |