How To Divide Property Without A Will in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக அன்றைய காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி அனைத்து வீடுகளிலும் மாறாமல் இருப்பது சொத்து பிரச்சனை மட்டும் தான். இன்னும் சொல்லப்போனால் சொத்து பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. காரணம் பணம் தான். பணம் இருந்தால் தான் இந்த உலகத்தில் நம்மால் வாழவே முடியும். அதை தான் Money Is Always Ultimate என்று சொல்கிறர்கள். நம்மில் பலரும் உயிர் வாழ்வதற்கு உணவும் நீரும் தான் தேவை என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த நீரையும், உணவையும் கூட நாம் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். அப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். சரி அதை விடுங்க. இது தான் நம் அனைவருக்கும் தெரியுமே. சரி வாங்க நண்பர்களே உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!
உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி..?
பொதுவாக என்னதான் பாசமான உடன்பிறந்தவர்களாக இருந்தாலும் சரி சொத்து என்றால் நீ யாரோ நான் யாரு தான். சரி ஒரு குடும்பத்தில் இருக்கும் தலைவர் அவருடைய சொத்துக்ளை உயில் எழுதாமல் இறந்துவிட்டார். அந்த சொத்துக்கள் யாருக்கு செல்லும், அந்த சொத்தை யாரெல்லாம் உரிமை கொண்டாடலாம் என்று இங்கு காணலாம்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 கீழ், சொத்தின் உரிமையாளர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்தச் சொத்தை முதல் வாரிசுகள் என்று சொல்ல கூடிய மனைவி, மகன், மகள் அல்லது தாய் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம். அதுவே முதல் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2 ஆம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்கலாம்.
👉பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா
அதுபோல முந்தைய காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை என்ற சட்டம் இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டில் வாரிசுரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட திருத்தத்திற்குப் பிறகு பெண்களுக்கும் மூதாதையர் சொத்தில் ஆண்களுக்கு சமமான உரிமை இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உயில் எழுதாத சொத்தை பிரிக்கும் முன், அந்த சொத்தின் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? |
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |