நில அளவுகள் அறிவோம் | How to Find Cent in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் பொதுவாக சிலர் ஒரு இடத்தை பார்த்தவுடன் அது எத்தனை சென்டாக இருக்கும் என்பதை மிக எளிதாக சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு மட்டும் அது எப்படி தெரிகிறது. நமக்கு ஏன் அது தெரியவில்லை என்று என்றாவது யோசித்தது உண்டா? அப்படி யோசித்தது உண்டு என்றால் இன்றைய பதிவில் அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதாவது இன்றைய பதிவில் ஒரு இடத்தை பார்த்தவுடன் அது எத்தனை சென்ட் என்று சொல்ல எளிய வழியை பற்றி தான் இன்றைய பதிவில் பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அதனை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
நில அளவுகள் அறிவோம் – How to Find Cent in Tamil:
ஒரு சதுர அடி என்றால் என்ன?
பொதுவாக ஒரு சென்ட் என்பது 435.56 சதுர அடி ஆகும். ஒரு சென்ட் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பற்றி முதலில் அறிவோம். ஒரு அடி என்பது எவ்வளவு என்று பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு அடி ஸ்கேலில் அவற்றில் 30 செண்டிமீட்டர் இருக்கும் அது தன ஒரு அடி ஆகும். ஒரு சதுர அடி என்பது ஒரு அடி ஸ்கேலை நான்கு பக்கமும் வைத்தீர்கள் என்றால் அவற்றின் நடுவில் இருக்கும் பகுதி தான் ஒரு சதுர அடி ஆகும். உதாரணத்திற்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
சதுர வடிவில் உள்ள இடத்தை எப்படி கணக்கிட வேண்டும்?
நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்ட சதுரவடிவதில் ஒரு இடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் நான்கு பக்கமும் 50 அடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆக நீளத்தின் அளவு மற்றும் அகலத்தின் அளவு ஆகிய இரண்டையும் பெருக்க வேண்டும். 50×50=2500 அன்று வரும் ஆக அந்த இடம் 2500 சதுர அடி என்று அர்த்தம் ஆகும். ஒரு சென்ட் 435.56 என்று முன்னாடியே சொன்னோம் அல்லவா. ஆக இந்த 2500 சதுர அடியை 436-யில் வகுத்து அந்த இடம் எத்தனை சென்ட் என்று அறிந்துகொள்ளலாம். சரி வாங்க வகுத்து பார்க்கலாம். 2500/435.56=5.7 என்று வரும் ஆக அந்த இடத்தின் அளவு 5.7 சென்ட் ஆகும். இது தான் சென்டின் கணக்காகும்.
செவ்வக வடிவில் உள்ள இடத்தை எப்படி கணக்கிட வேண்டும்?
அதுவே ஒரு இடம் செவ்வக வடிவில் இருந்தால் அதனை எப்படி கணக்கிட வேண்டும் என்றால். உதாரணத்திற்கு நீளம் 50 அடி, அகலம் 60 அடி என்றால். நீளத்தையும் அகலத்தையும் பெருக்க வேண்டும். 50×60=3000 சதுர அடி ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.!
நான்கு பாக்கமும் வெவ்வேறு அளவில் இருக்கும் இடத்தை எப்படி கணக்கிட வேண்டும்?
ஒரு இடம் சம்பந்தமே இல்லாத அளவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அதனை எப்படி கணக்கிட வேண்டும் என்றால். அந்த இடத்தில் உள்ள நீளத்தின் இரண்டு பக்கத்தையும் அளந்து கூட்டிக்கொள்ளவும். பின் அதனை இரண்டால் வகுக்க வேண்டும். அவற்றில் வகுத்து கிடைத்த விடை தான் நீளத்தின் அளவாகும். அதேபோல் அகலத்தின் இரண்டு பக்கமும் அளந்து கூட்டி இரண்டால் வகுக்கவும். அவற்றில் வகுத்து கிடைத்த விடை தான் அகலத்தின் விடையும். பிறகு நீளம் மற்றும் அகலம் இரண்டியும் பெருக்கவும். பெருக்கி கிடைத்த அளவுடன் இருந்து 435.56-ஆள் வகுத்தால் அந்த இடம் எத்தனை சென்ட் என்று தெரிந்துவிடும்.
உதாரணத்திற்கு நீளம் ஒரு பக்கம் 20 அடி, இன்னொரு பக்கம் 30 அடி என்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டியும் கூட்டி இரண்டால் வகுக்கவும். அப்படி வகுத்தால் நமக்கு 25 விடை கிடைக்கும் அது தான் நீளத்தை அளவுக்கும். அதேபோல் அகலம் ஒரு பக்கம் 40 இன்னொரு பக்கம் 50 அன்றால் அவை இரண்டியும் ஒன்றாக கூட்டி இரண்டால் வகுக்கவும். அப்படி வகுத்தால் நமக்கு விடை 45 என்று வரும். ஆக அகலத்தின் அளவு 45 ஆகும். இப்பொழுது இந்த நீளம் மற்றும் அகலம் இரண்டியும் பெருக்கவும். 25×45=1125 என்று வரும். இந்த 1125 தான் அந்த இடத்தின் சதுர அடி ஆகும். இந்த சதுர அடியை 436-ஆள் வகுக்கவும். 1125/436=2.5 என்று வரும். இந்த 2.5 தான் அந்த இடத்தின் சென்ட் ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |