சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி? இதோ சில வழிகள்..!

Advertisement

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி? இதோ சில வழிகள் (How to find the original honey in tamil)..!

தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் அனைத்து பொருட்களிலும் கலப்படம் கலந்து உள்ளது. அந்த வகையில் கலப்படம் இல்லாத சுத்தமான தேனை கண்டுபிடிக்க சில சூப்பர் (How to find the original honey in tamil) ஐடியா இதோ..!

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ஸ்டேப்: 1

ஒரு கண்ணாடி கிளாசை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் தண்ணீர் ஊற்றி நிரப்ப வேண்டும். பின் அதில் ஒரு சொட்டு தேனை ஊற்ற வேண்டும். அந்த தேன் கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் அந்த தேன் எந்த ஒரு கலப்படமும் இல்லாத சுத்தமான தேன்.

முகம் சிவப்பழகு பெற தேன் இயற்கை அழகு குறிப்புகள்..!

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ஸ்டேப்: 2

ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு சொட்டு தேன் ஊற்ற வேண்டும். அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ஸ்டேப்: 3

பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்த பின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ஸ்டேப்: 4

நல்ல மணலில் இரண்டு சொட்டு தேனை விடவேண்டும், பின் ஒரு நிமிடம் வரை காத்திருக்கவும், ஒரு நிமிடம் கழித்த பின் குனிந்து வாயால் ஊத  வேண்டும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம். மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி / கலப்படம்.

இந்த நான்கு முறைகளில் ஏதேனும், ஒன்றினை பாலோ செய்தாலே போதும் சுத்தமான தேனை கண்டுபிடிக்க முடியும்.

தேனின் நன்மைகள்:-

தேன் பயன்கள்: 1

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தேனில் பேரிச்சை பழத்தை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

தேன் பயன்கள்: 2

அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பிட பிறகு இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும்.

தேன் பயன்கள்: 3

என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம்.

தேன் பயன்கள்: 4

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்லது.

தேன் பயன்கள்: 5

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement