ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா..? அப்போ இப்படி செய்யுங்க போதும்..!

Advertisement

How To Get Back Lost Train Ticket in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு ரயில் பயணம் என்றால் பிடிக்குமா..? யாருக்கு தான் ரயில் பயணம் பிடிக்காது என்று சொல்வீர்கள். ஆமாம் நம்மில் பலருக்கும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் ரயில் பயணம் என்பது ஒரு அழகிய தருணம் ஆகும். பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தை தான் பலரும் விரும்புகிறார்கள். இவ்வளவு ஏன் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தான் பலரும் தேர்வு செய்கிறார்கள். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி இப்போது நீங்கள் ரயிலில் செல்லப்போகிறீர்கள் என்றால், முன்னரே ஸ்டேஷனில் டிக்கெட் எடுப்பீர்கள் அல்லவா..? ஒரு வேளை அந்த டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள். அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது..? 

How to get back lost train ticket

நாம் அனைவருமே ரயிலில் பயணம் செய்திருப்போம். அப்படி பயணம் செய்யும் போது ரயிலில் செல்வதற்கு ஆதாரமாக இருப்பது நாம் வாங்கிய டிக்கெட் தான். இந்த டிக்கெட் தான் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.

ஒருவேளை ரயில் டிக்கெட்டை தொலைத்துவிட்டு ரயிலில் பயணம் செய்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இதனால் பலரும் சில நேரங்களில் ரயில் டிக்கெட்டை தொலைத்துவிட்டு சிரமப்படுகிறார்கள். அதனால் இன்று ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்று இங்கு காணலாம்.

ரயில் டிக்கெட் இனி வாட்சப் மூலம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா

How to get back lost train ticket

உங்களுடைய ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால், ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்திலோ அல்லது ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE) உதவியுடனோ உங்கள் பெயரில் வழங்கப்பட்ட புதிய டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதுபோல நீங்கள் TTE அல்லது டிக்கெட் கவுன்டரை அணுக வேண்டும். அங்கு போதுமான கட்டணத்தைச் செலுத்தி நகல் டிக்கெட்டை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டண தொகை 50 ரூபாய் முதல் தொடங்குகிறது.

அதுவே நீங்கள் ஏசி பெட்டியில் பதிவு செய்திருந்தால், டிக்கெட்டின் நகலை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோல Reservation Chart வெளியிட்ட பிறகு நீங்கள் உறுதி செய்யபட்ட டிக்கெட் தொலைந்தால், பயணக் கட்டணத்தில் இருந்து 50% அபராதமாக செலுத்த வேண்டும்.

ஒருவரில் பெயரில் புக் செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றலாம்..

How to get back lost train ticket

அதுபோல ஒருவரின் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு கிழிந்தால், அவர் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தில் இருந்து 25% பெற்றுக் கொண்டு நகல் டிக்கெட் வழங்கப்படும்.

மேலும் நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் நகல் டிக்கெட் வழங்கப்படாது. அதுபோல ரயில் புறப்படுவதற்கு முன் உங்கள் தொலைந்த டிக்கெட் கிடைத்து விட்டால், ரயில்வே கவுன்டரில் நகல் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அசல் டிக்கெட்டைக் காட்டி பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவேளை ரயில் புறப்பட்ட பின் உங்களிடம் டிக்கெட் இல்லையென்றால், நீங்கள் ரயிலில் TTE -ஐ அணுகி, நீங்கள் பயணிக்க விரும்பும் தூரத்திற்கு அந்த இடத்திலேயே டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் கூடுதலாக, டிக்கெட் வழங்க TTE -க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement