தொலைந்த மார்க் சீட்டை திரும்ப பெற என்ன செய்யவேண்டும்
வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். உங்களுடைய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மார்க் சீட் தொலைந்து விட்டதா..? கவலை படாதீர்கள். தொலைந்து போன உங்கள் மார்க் சீட்டை திரும்ப பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மார்க் சீட் திரும்ப பெற செய்யவேண்டியவை:
உங்களுடைய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மார்க் சீட் தொலைந்து விட்டால் கவலைபட தேவையில்லை. மார்க் சீட்டை திரும்ப பெற்று விடலாம். மார்க் சீட் திரும்ப பெறுவதற்கு பல வழிகள் உள்ளன.
- மார்க் சீட் தொலைந்து போனதை உங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் கொடுக்கவேண்டும்.
- தொலைந்து போன மார்க் ஷீட்டின் நகல் (xerox copy) ஓன்று இருந்தால், அதை நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று மார்க் சீட் தொலைந்து விட்டதை தெரியப்படுத்த வேண்டும். பின் மார்க் சீட் அப்ளை (Apply) செய்வதற்கான விதிமுறைகளை ஆசிரியரின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
- இல்லையென்றால், பொது இ-சேவை மையத்தில் மார்க் சீட் தொலைந்ததை சரியான காரணத்துடன் கூறி அவர்களிடம் இருந்து LDR ரிப்போர்ட் மற்றும் மார்க் சீட் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் கிடைத்து விடும். ஆன்லைனில் என்னென்ன சான்றிதழ்கள் தொலைந்ததோ அவற்றை குறிப்பிட்டு பதிவு செய்து அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உங்கள் பள்ளிக்கு சென்று இந்த விண்ணப்பத்துடன் உங்கள் மார்க் சீட் தொலைந்துவிட்டதை சரியான தகவல்களுடன் கூறி ஒரு கடிதம் எழுத வேண்டும். இந்த கடிதத்துடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததற்கான ரசீதை சேர்த்து தலைமை ஆசிரியரின் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும்.
- இதற்கான தேடுதல் கட்டணத்தை வங்கி வரையோலை (dd) மூலம் அனுப்பலாம். மேலும், இந்த கட்டணத்தை பொது இ-சேவை மையத்திலும் கட்டலாம்.
- கிராம நிர்வாக அலுவலரை நேரில் சென்று பார்த்து இ-சேவை மையத்தில் பதிந்த நகலை காண்பிக்கவேண்டும்.
- அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து அவற்றை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.
- பள்ளி சான்றிதழ் என்பதால் விண்ணப்பத்தை கல்வி துறைக்கு அனுப்பவேண்டும்.
- பின் அதிலிருந்து 2 மாதங்களுக்குள் உங்கள் சான்றிதழ் உங்களுக்கு கிடைக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |