இந்த குணம் கொண்ட நபரை நண்பர்களாக ஏற்பது நல்லதல்ல..!

Advertisement

தவறான குணம் கொண்ட நண்பர்களை அறிவது எப்படி? | How to Know Your Bad Friends in Tamil

நண்பன்ல யாருடா கெட்ட நண்பன், நல்ல நண்பன் நண்பன்னாலே நல்லவன் தான் அப்படின்னு சினிமால நடிகர் சந்தானம் சொல்லி கேட்டிருப்போம். உண்மையில் நண்பர்கள் தான் நாம் கஷ்டப்படும் நேரத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். மிகவும் கடினமான நேரத்தில் கூட உதவி செய்யும் மனம் நண்பர்களுக்கு மட்டும் தான் உள்ளது. பெண்களின் நட்பை விட, ஆண்களின் நட்பு மிகவும் பலமானதாக இருக்கும். நட்பு என்பது மிகவும் புனிதமானது. நட்பு புனிதமானது என்றாலும் கூட ஒரு சில குணம் கொண்ட நபர்களை உங்கள் நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி வைப்பது அல்லது ஒதுக்கி வைப்பது நல்லது என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில் நிபுணர்கள் கூறும் அந்த ஒரு சில குணங்களை பற்றி இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

How to Know Your Bad Friends in Tamil

1:

உங்களுடன் பேசும் போது என் வேலை, என் உறவினர், என் நண்பர்கள் என தன்னை பற்றி மட்டும் பேசும் தன் விஷயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களிடம் நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏன் இவர்களுடன் நட்பு கொள்ளவேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் இவர்கள் தன்நலத்தை மட்டும் யோசிப்பார்கள்.

2:

உங்களை பேசவிடாமல் அல்லது பேசுவதற்கு உங்கள் வாய்ப்பு அளிக்காமல் தான் மட்டுமே பேச வேண்டும் அல்லது தான் பேசுவதை தான் நீ கேட்க வேண்டும் என நிர்பந்திக்கும் நபர்களிடம் நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.

3:

உங்களை பற்றி மற்றவர்களிடமும், மற்றவர்களை பற்றி உங்களிடமும் கிசுகிசு பேசும் நபர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இவர்களுடைய ஆர்வம் பல சமயங்களில் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

4:

வெளியே செல்வோம் வா என்று அழைப்பார்கள் சிலர், கண்டிப்பாக அவர்களுக்கு பயன் இல்லாமல் கண்டிப்பாக வெளியே செல்வோம் என்று அழைக்கமாட்டார்கள். அதாவது தன் தேவைக்காக மட்டும் நம்முடன் வரும் இந்த நபர்களை உங்கள் நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்குவது அல்லது ஒதுக்கி வைப்பது மிகவும் உங்களுக்கு நல்லது.

5:

உங்கள் விருப்ப வெறுப்புகளுக்கும் சேர்த்து தானே முடிவெடுக்கும் நபர்களுடன் நட்பு கொள்வது நல்லதல்ல. இவர்கள் பெரும்பாலும், அவர்களது கருத்துக்களை உங்கள் மீது திணிப்பது உண்டு.

6:

நீங்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும் கூட, அதனை சரியான முறையில் உங்களுக்கு புரிய வைக்கும் நபர்களுடன் நட்பு கொள்வது நல்லது. ஆனால் அதற்கு மாறாக நீ இப்படி செய்யாதே, நீ அப்படி செய்யாதே என்று உங்களிடமே நேரடியாக குறை கூறும் நபர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

7:

நண்பர் என நினைத்து உங்கள் இரகசியங்களை அவர்களிடம் வெளிப்படுத்திருப்பீர்கள். ஆனால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நபர்களை நண்பராக ஏற்றுக்கொள்வது மிகவும் தவறான செயலாகும். இவர்களுடன் பழகுவது என்று ஆபத்தானது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றன.

8:

உங்கள் வளர்ச்சிக்கு மகிழ்ச்சி கொள்ளாத நபர்கள் மற்றும் பொறாமை படும் நபர்களை உங்கள் நட்பு வட்டாரத்தில் வைத்துக்கொள்வது நல்லதல்ல. இவர்களுடன் நெருங்கி பழகுவது என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement