பான் எண்ணுடன் ஆதார் எண்ணை Link செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | How to link aadhaar with pan in tamil..!

How to link aadhaar with pan

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை Link செய்வது எப்படி? How to link aadhaar with pan in tamil..!

How to link aadhaar with pan in tamil/ How to link aadhaar with pan:- உங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா? இந்த செயல்முறையை முடித்தவர்கள் தப்பித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை இன்றுவரை ஒன்னும் நாங்கள் லிங்க் பண்ணலப்பா என்பவர்களுக்கு தான் இந்த பதிவு.

பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்

 

அதாவது ஆதார் கார்டு உள்ள அனைவரும் அவர்களது பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் மட்டுமே உள்ளது. எனவே கால அவகாசம் முடிவடைவதற்கு முன் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை லிங்க் செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாள் 2021 மார்ச் 31 என்று கூறப்பட்டது. இதனை தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் என்றும். அதோடு அபராத தொகையும் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இதன் காரணமாக பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு காலையில் இருந்தே படையெடுத்தனர்.

ஒரே நேரத்தில் பலர் வலைதளத்தை அணுகியதால் அந்த பக்கம் திடீரென முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். தொடர்ந்து முடங்கிபோன வலைத்தளம் இயல்பு நிலைக்கு திரும்பி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதியுடன் பான் – ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூபாய் 10,000/- அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசத்தை நீட்டித்து வருவான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பான் – ஆதார் எண் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. எனவே பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணினை பான் எண்ணுடன் 2021 ஜூன்-30 வரைக்கும் எந்த ஒரு அபராத தொகையும் செலுத்தாமல் லிங்க் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..! online services list in tamilnadu

link aadhar to pan – இதுதான் கடைசியா?

தற்சமயம் அந்த கெடு மார்ச் 31-க்குள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மீண்டும் மாற்றி அமைக்கப்படுமா அல்லது இதுதான் கடைசியா என்பது தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும் உடனே லிங்க் செய்து கொள்வதுதான் நல்லது.

ஒருவேளை நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது.

ஒன்று, ஆதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம்.

இரண்டாவது வழி 565778 அல்லது 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க..

முதலாவதாக வருமான வரி இணையதளம் மூலமாக எப்படி இணைக்கலாம் என்பதை (pan card aadhar card link tamil) பற்றி பார்ப்போம் வாங்க..!

Online-யில் GST Registration செய்வது எப்படி? GST Registration in Tamil..!

 வழிமுறை: 1

முதலில் ஆன்லைன் வழியாக www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

வழிமுறை: 2

link aadhar to pan: பின் வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

 வழிமுறை: 3

இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு திரை தோன்றும் அந்த பக்கத்தில் PAN எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை தெளிவாக டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை: 4

ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

வழிமுறை: 5

விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

வழிமுறை: 6

Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.

Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? (How to apply passport online in tamil)

SMS மூலம் இணைக்க வழிமுறை /How to link aadhaar with pan sms:-

How to link aadhaar with pan sms – வழிமுறை-1

முதலில் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான்-ஆதார் இணைப்பை நிகழ்த்தலாம்.

How to link aadhaar with pan sms – வழிமுறை-2

அவ்வாறு செய்யவேண்டும் என்றால், நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் எதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல் வேண்டும். இதன் மூலம் பாண் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com