வெறும் 2 நிமிடத்தில் ஆன்லைனில் பான் கார்டு திருத்தம் செய்யலாம்..! How to Make Correction in Pan Card Online in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஆன்லைன் வழியாக பான் கார்டு திருத்தம் செய்வது எப்படி? என்று தெரிந்துகொள்வோம். பான் கார்டு மிகவும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்த குறிப்பாக வங்கி சம்பந்தமான பணிகளுக்கு இந்த பான் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தான் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று பல முறை அறிவித்தது. இதற்கு மார்ச் 31-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பான் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதனை நீங்கள் ஆன்லைனில் மிக எளிதாக செய்துகொள்ளலாம் அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதாருடன் பான் கார்டு லிங்க் செய்யப்பட்டதா? இல்லையா என்பதை அறிவது எப்படி?
How to Make Correction in Pan Card Online in Tamil:
புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய http://www.onlineservices.nsdl.com/paam/என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பிறகு அவற்றில் User ID, Password மற்றும் Captcha Code ஆகியவற்றை உள்ளிட்டு Submit என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Application Type’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவும்.
அடுத்து, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும். பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் டோக்கன் எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் இ-மெயில் ஐடி-யை சரியாக கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து விண்ணப்ப பக்கம் சென்று அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும்.
ஆக ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது…! அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |