Siblings Partition in Tamil
தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் இன்று உடன்பிறந்தவர்கள் பாகப்பிரிவினை செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தை வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
உடன்பிறந்தவர்கள் பாகப்பிரிவினை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
பொதுவாக எல்லா குடும்பத்திலும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. என்னவென்று யோசிக்கிறீர்களா அது பாகப்பிரிவினை தான். அனைத்து குடும்பத்திலும் 1 -க்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அங்கு கட்டாயம் பாகப்பிரிவினை இருக்கும். அப்படி பாகப்பிரிவினை செய்யும் முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
பொதுவாக சொத்துக்கள் 3 விதமாக பிரிக்கப்படுகிறது. உயில், தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்வீக சொத்து என்ற மூன்றின் அடிப்படையில் தான் சொத்துக்கள் வருகிறது.
குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா..? |
♦ ஒருவர் தனது சொத்தை குடும்பத்தில் இருக்கும் மனைவி, மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் இவர்களில் ஒருவரின் பெயரில் மட்டும் தன் சொத்துக்களை உயில் எழுதி கொடுக்கிறார் என்றால் அந்த சொத்துக்களை பாகப்பிரிவினை செய்ய முடியாது.
அதுவே அவர் என் சொத்துக்கள் அனைத்தும் என் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதி கொடுக்கிறார் என்றால், அந்த சொத்துக்களை மகன்கள் அல்லது மகள்கள் சம பாகமாக பிரித்து கொள்ள முடியும்.
♦ சொத்தின் உரிமையாளர் சொத்தை உயில் எழுதாமல் தன் பெயரிலேயே வைத்திருக்கிறார் என்றால் அந்த சொத்துக்கள் தன் பிள்ளைகளுக்கு வந்து சேரும். அந்த சொத்தை பிள்ளைகள் எத்தனை பேர் இருந்தாலும் அதை சம பாகமாக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் இல்லை என்றால் அது இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு செல்லும். அதாவது பேரன் பேத்திகளுக்கு செல்லும்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? |
இருவரில் ஒருவர் பாகப்பிரிவினை செய்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது..?
♦ இதுபோல 2 நபர்களில் ஒருவர் மட்டும் பாகப்பிரிவினை செய்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், அவருக்கு சொத்திற்கு தகுந்த பணமோ அல்லது தங்கம் போன்ற பொருளோ கொடுக்கலாம். அந்த பொருளை அவர் வாங்குகிறார் என்றால் அதற்கு அவரிடம் இருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.
♦ ஒரு வழியாக அண்ணன் தம்பி இருவரும் சொத்தை சம பாகமாக பிரித்து கொண்டனர். ஆனால் அவர்களின் நிலம் ஒரே சர்வே நம்பரில் இருந்தால் என்ன செய்வது. நிலத்திற்கு ஒரே சர்வே நம்பர் இருக்கும் பட்சத்தில் அதற்கு நீங்கள் தனிபட்டா வாங்கிய பின் சர்வேயரை கொண்டு உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும்.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..? |
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |