உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி? – Ungal Thoguthiyil Muthalamaichar Manu
நண்பர்களுக்கு வணக்கம்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சருக்கு மனு செய்வது எப்படி என்று தான் இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். தற்போதையமுதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய முதலமைச்சரின் குறைதீர்க்கும் மேலாண் அமைப்பு (IIPGCMS) (CM Helpline) என்ற ஒரு திட்டத்தை சென்ற ஆண்டு அறிமுகம் செய்தற். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மக்களின் வசதிக்கேற்ப இருப்பிடத்தில் இருந்தப்படியே குறைகளை இணையதளம் வழியாக பதிவிடவும் தீர்வு கண்டிடவும் இயலும். இதுவே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
மனுதாரர்கள் இணையதளம் வாயிலாக எந்த நேரத்திலும் எச்சூழ்நிலையிலும் தங்களது குறைகளை பதிவு செய்யலாம். அதேபோல் நீங்கள் அளித்த குறைகளின் நிலைகளை அறிந்துகொள்ளலாம். கேள்விகள் எழுப்பலாம். இத்திட்டத்தை மேம்படுத்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம், மேலும் முதல்வரின் பொது அறிக்கைகளை காண இயலும். இந்த சேவையை பயன்படுத்த பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது கட்டணம் இல்லாத
தொலைபேசி அழைப்பு எண் – 1100, இணையதள சேவை, அலைபேசி செயலி, மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வழி சேவையாகும். மேற்காணும் சேவைகள் வழியாக பதிவு செய்யப்படும் குறைகள்யாவும் அழைப்பு மையம் வழியே சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்புதல் மற்றும் தொடர்ந்து கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?
பொதுமக்களின் குறைகளை களைந்திட ஒருங்கிணைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளது
இந்த சேவையில் நீங்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள புகார், மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்றபடி தனியார் துறை சார்ந்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
உதாரணத்திற்கு அரசு திட்டங்கள் வராமல் இழுக்களிக்கப்பட்டால் மற்றும் குடிநீர் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவைகள் போல் கேட்கலாம். இவை இரண்டு புகார் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். மாறாக இது போன்ற ஒவ்வொரு துறையிலும் உள்ள புகார்களுக்கு கொடுக்கலாம், அது எந்த வகை துறையாக இருந்தாலும் சரி அந்த புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படும். சரி வாங்க ஆன்லைன் வழியாக உங்கள் தொகுதியில் முதலமைச்சருக்கு மனு செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி?
https://cmhelpline.tnega.org/portal/ta/home என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திரிக்கு செல்லவும்.
பின் அவற்றில் உங்கள் தொலைபேசி என்னை கொடுத்து Sing Up செய்துகொள்ளுங்கள்.
பிறகு இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு வந்து மனு செய்ய என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு மேல் படத்தில் கொடுக்கட்டுள்ளது போல் ஒரு படிவம் தோன்றும் அவற்றை நீங்கள் தெளிவாக பூர்த்தி செய்து Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். Submit என்பதை கிளிக் செய்தபிறகு வெற்றிகரமாக உங்கள் கோரிக்கைளை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று வரும். அதேபோல் உங்கள் மொபைல் எண்ணிற்கும் ஒரு Referral எண்ணும் வரும் அந்த Referral எண்ணினை பயன்படுத்தி உங்கள் புகாரின் நிலையை இந்த இணையத்தளத்திலேயே நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜமாபந்தி மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |