பணம் அனுப்புதல்
வணக்கம் நண்பர்களே..! நவீன காலத்தில் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றாக ஆகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கு Phone மட்டும் இருந்தால் போதும். வேறு ஒரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு வங்கி மற்றும் அஞ்சலகத்துக்கு செல்ல வேண்டியது இல்லை. உங்களுடைய phone-லில் வீட்டில் இருந்த படியே பணம் அனுப்பலாம். அவ்வாறு பணத்தை UPI மூலம் அனுப்பும் போது தவறாக வேறு யாருடைய வங்கி கணக்கிற்காவது பணம் அனுப்பிவிட்டால் பயப்படாதீர்கள். அப்படி தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.!
இதையும் படியுங்கள்⇒ஒரு SMS அனுப்புனா? BANK உங்கள் கையில் இருக்கும்..! SMS பண்ணிட்டிங்களா
Money Transaction Through UPI in Tamil:
நீங்கள் UPI மூலம் பண அனுப்புதல் என்பது ஸ்மார்ட் போன் உதவியுடன் எளிய முறையில் செயல் படக்கூடிய ஒன்றாகும். யுபிஐ ஆனது ஒரு சில நொடிகளில் ஒருவருடைய கணக்கில் இருந்து மற்றொருவர் கணக்கிற்கு பணம் அனுப்ப கூடிய ஒரு பரிவர்த்தனை. அவ்வாறு பணம் அனுபவதற்கு எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
தவறுதலாக அனுப்பிய பணம்:
UPI மூலம் பணம் அனுப்பும்போது தவறுதலாக வேறு ஒரு நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் பயப்பட வேண்டாம். அந்த பணத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்ப பெறலாம் என்றும் அதற்கான வழிகாட்டுதலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
யுபிஐ SMS:
UPI மூலம் தவறுதலாக வேறு ஒரு நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் உடனடியாக உங்களுக்கு பணம் சென்றடைந்து விட்டதற்கான SMS வரும். அந்த SMS நீங்கள் Delete செய்யாமல் Save செய்ய வேண்டும். அந்த SMS இருந்தால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும்.
எனவே அந்த SMS–ல் பணம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதி செய்யப்பட்டதற்கான பிபிஎல் பிண் இருக்கும். பணத்தை திரும்ப பெறுவதற்கு பிபிஎல் எண் முக்கியமான ஒன்று.
website in Tamil:
நீங்கள் அப்படி தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் உடனே bankingombudasman.rbi org.com என்ற website-ற்கு சென்று இது குறித்த புகார் அளிக்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் கணக்கு வைத்து இருக்கும் வங்கிக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தில் உங்களுடைய வங்கி கணக்கு எண், பெயர் தவறுதலாக பணம் அனுப்பிய வங்கி கணக்கின் முழுவிவரத்தையும் அளிக்க வேண்டும்.
Help Line Number in Tamil:
நீங்கள் கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் ஹெல்ப் லைன் எண்கள் மூலமாகவும் புகார் அளிக்கலாம். ஹெல்ப் லைன் எண்ணை அழைத்து அதில் தவறாக பணம் அனுப்பிய முழுவிவரங்களையும் தெரிவிக்கவும்.
வங்கி மேலாளரிடம் புகார்:
அதன் பிறகு நீங்கள் கணக்கு வைத்து இருக்கும் வங்கிக்கு நேரில் சென்று வங்கி மேலாளரிடம் இது குறித்து புகார் அளிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் நீங்கள் தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் இரண்டு நாட்களில் உங்களுக்கு கிடைத்து விடும்.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | 👍News |