SBI Internet Banking Password-ஐ Reset செய்ய வேண்டுமா? அதற்கான வழிமுறை இதோ..!

Advertisement

SBI Internet Banking Password-ஐ Reset செய்ய வேண்டுமா? அதற்கான வழிமுறை இதோ..! How to Reset SBI Internet Banking Password Online in Tamil..!

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க உள்ளோம். அதாவது வங்கிகள் ஆன்லைன் மூலம் சேவைகளை பெற இன்டர்நெட் பேங்கை அறிமுகம் செய்தது. அது அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்த Net-Banking-யை Open செய்ய உங்களது Username மற்றும் Password தேவைப்படும். ஒரு வேளை நாம் இந்த SBI Internet Banking -ஐ கொஞ்ச நாள் பயன்படுத்தாமல் இருந்து அல்லது  நாம் நீண்ட நாட்களாக இந்த சேவையை பயன்படுத்தாமல் இருந்து அல்லது நாம் அமைத்த Password-ஐ நினைவில் வைத்துக்கொள்ள கடினமானதாக இருக்கலாம். இந்த காரணங்களால் நீங்கள் Password-யை மறந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது .

அப்படி மறந்துவிட்டால் Net Banking Login Password-யை ஆன்லைன் மூலம் எவ்வாறு Reset செய்து கொள்ளலாம் அது எப்படி என்பதை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம். இந்த பதிவு SBI Internet Banking பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

How to Reset SBI Internet Banking Password Online in Tamil

Forgot My Login Password:

ஸ்டேப்: 1

முதலில் SBI வங்கியின் இணையதள சேவை பக்கமான https://retail.onlinesbi.com பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டேப்: 2

இப்பொழுது SBI-ன் Internet Banking Login பக்கம் இருப்பதை காணலாம். அதில் Forgot Username / Login Password என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

Forgot Username / Login Password என்பதை கிளிக் செய்ததும் மற்றொரு பக்கம் திறக்கப்படும், அவற்றில் ஏற்கனவே Forgot My Login Password என்பது தேர்வாகி இருக்கும். இப்பொழுது அதற்கு கீழே உள்ள Next என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4

இந்த பக்கத்தில் உங்களின் Net-banking-ன் Username, Account Number, Mobile Number, Date of Birth போன்ற தகவல்கள் இருக்கும். ஆக அவற்றை சரியாக பூர்த்தி செய்யுங்கள். பிறகு அவற்றில் கீழே உள்ள Captcha Code-யை Enter செய்து Submit என்பதை கிளிக்  செய்யவும்.

ஸ்டேப்: 5

இப்பொழுது நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள Mobile எண்ணிற்கு ஒரு OTP Number வரும். அந்த Number-யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.



Forgot Username:

உங்களுடைய Username தெரியவில்லை என்றாலும், மேல் கூறப்பட்டுள்ள ஸ்டெப்பை போன்றுதான் மற்ற வேண்டியதாக இருக்கும். அதற்கான வழிமுறை இதோ..

ஸ்டேப்: 1

அதாவது https://retail.onlinesbi.com இணையதளத்திற்கு செல்லுங்கள். பின் Forgot Username / Login Password கிளிக் செய்யுங்கள், பிறகு Forgot My Login username என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பிறகு Next என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் CIF Number, Country, INB Registered Mobile Number ஆகிய தகவல்கள் இருக்கும் அவற்றை சரியாக உள்ளிடவும். பிறகு அவற்றில் கீழே உள்ள Captcha Code-யை Enter செய்து Submit என்பதை கிளிக்  செய்யவும்.

ஸ்டேப்: 3

Submit பட்டனை கிளிக் செய்ததும் உங்கள் நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள Mobile எண்ணிற்கு ஒரு OTP Number வரும். அந்த Number-யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கான Username திரையில் கட்டப்படும் அதேபோல் உங்கள் மொபைல் எண்ணிற்கும் அந்த username அனுப்பப்படும். ஆக அதனை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



சரி வாங்க இப்போ SBI Internet Banking Password-ஐ Reset செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். இந்த SBI Internet Banking Password-ஐ Reset செய்ய மூன்று Options இருக்கிறது அவை..

  1. Using ATM Card Details
  2. Using Profile Password
  3. Reset Your Login Password with Branch activation

இந்த மூன்று முறையிலும் எப்படி SBI Internet Banking Password-ஐ Reset செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..



Using ATM Card Details மூலம் எப்படி Reset செய்வது? | Reset SBI Login Password by Using ATM Card Details:

ஸ்டேப்: 1

நீங்கள் முதலாவதாக உள்ள Using ATM Card Details என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

இதில் உங்கள் ATM Card யை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

தற்போது Debit Card Validation என்ற பக்கம் திறக்கும். அதில் உங்களின் ATM Card இல் உள்ள Expiry Date, Card Holder Name மற்றும் ATM PIN Number ஆகியவற்றை Enter செய்து Proceed என்ற பட்டனை அழுத்தவும்.

ஸ்டேப்: 4

அடுத்து வரும் பக்கத்தில் Enter New Login password என்ற இடத்தில் உங்கள் புதிய password-யை நீங்கள் Type செய்ய வேண்டும். பிறகு அதற்க்கு கீழ் உள்ள Conform New Login Password என்ற இடத்தில் அதே Password-யை மீண்டும் Type செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

ஸ்டேப்: 5

இப்பொழுது உங்களுக்கு Your Login Password has been reset successfully என்ற செய்தி வரும்.



Using Profile Password  மூலம் எப்படி Reset செய்வது? | Reset SBI Login Password by Using Profile Password 

ஸ்டேப்: 1

இரண்டாவதாக உள்ள Using Profile Password என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

இப்பொழுது உங்களின் Profile Password-யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

அடுத்த பக்கத்தில் உங்களின் New Password-யை Set செய்யலாம்.



Password with Branch activation மூலம் எப்படி Reset செய்வது? | Reset Your Login Password with Branch activation:

ஸ்டேப்: 1

Reset Your Login Password with Branch Activation என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

இப்பொழுது உங்களுக்கு ஒரு Reference Number வரும். மேலும் அதில் உள்ள Click Here என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு Form Download ஆகும்.

ஸ்டேப்: 3

அந்த Form-யை Print எடுத்துக்கொண்டு அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி வங்கியில் சென்று கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

பிறகு வங்கியில் இருந்து உங்களுக்கு ஒரு மூடப்பட்ட போஸ்ட் கவரை கொடுப்பார்கள். அதில் உங்களின் Login Password இருக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement