கலப்படம் உள்ள உணவுகளை கண்டறிவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How To Spot Adulterated Foods in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் நாம் கலப்படம் நிறைந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

பாலில் தொடங்கி நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கலப்படம் இருக்கிறது. சரி கலப்படம் உள்ள உணவுகளை எப்படி கண்டறிவது என்று யோசிக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்று இந்த பதிவின் மூலம் உணவுகளில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

கலப்படம் உள்ள உணவுகளை கண்டறிவது எப்படி..? 

நாம் உண்ணும் உணவுகள் தான் நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஆனால் அந்த உணவுகளிலும் கலப்படம் இருந்தால் நாம் என்ன செய்வது..? கலப்படம் உள்ள உணவுகள் தான் நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் அனைத்து உணவு பொருட்களிலும் நம் கண்ணுக்கு தெரியாத வகையில் கலப்படம் இருக்கிறது. அதுபோல எந்த உணவுகளில் என்ன கலப்படம் இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பால்: 

ஆரோக்கியமான உணவுகளில் பால் முதலிடத்தை பிடிக்கிறது. ஆனால் பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?

 ஒரு பளபளப்பான தட்டில் 1 சொட்டு பாலை ஊற்றி சாய்க்க வேண்டும். பாலாக இருந்தால் சாய்க்கும் போது அது வெண்மை நிறம் பதிந்து மெதுவாக கீழிறங்கும்.  அதுவே பாலில் நீர் சேர்க்கப்பட்டிருந்தால் வெண்மை நிறம் படியாமல் அப்படியே கீழிறங்கி விடும்.

இதை வைத்து நீங்கள் பாலில் கலப்படம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்..?

காபி தூள்:

 காபி தூளில் சிக்கரி என்ற வேதி பொருள் கலப்படுகிறது. அதை கண்டறிவதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்து கலக்க வேண்டும். 

காபி தூளில் சிக்கரி கலந்திருந்தால் காபி தூள் மேலே மிதக்கும். சிக்கரி கீழே படிந்து விடும்.

இதனை வைத்து காபி தூளில் கலப்படம் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

நெய்: 

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் அரை ஸ்பூன் நெய் எடுத்து கொள்ளுங்கள். அதில் டிஞ்சர் அயோடினை 3 சொட்டுகள் சேர்க்க வேண்டும்.  பின் அது நீல நிறமாக இருந்தால் நெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

சர்க்கரை: 

வெள்ளை சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். அதை கண்டறிவதற்கு  1 கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கரைத்தால் சுண்ணாம்பு அடியில் தங்கி விடும். 

இதை வைத்து சர்க்கரையில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மிளகாய்த் தூள்: 

மிளகாய்த் தூளை 1 கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். மிளகாய் தூள் நீரின் அடியில் தங்கிவிட்டால் அது கலப்படம் இல்லாதது என்று அர்த்தம்.  அதுவே மிளகாய் தூள் மேலே மிதந்தால் அதில் மரத்தூள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..!

தேன்: 

1 ஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் தண்ணீரில் விடவும். நல்ல தேனாக இருந்தால் அது நீரில் கலக்காது.  அதுவே தேன் நீரில் கலந்து விட்டால், அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் கலக்கப்படுகிறது. நல்ல தேங்காய் எண்ணெயை Fridge வைத்தால் உறையும். ஆனால் பிற எண்ணெய்கள் கலந்த  தேங்காய் எண்ணெய்யை உறையாது Fridge வைத்தால் உறையாது .

இதனை வைத்து தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement