இடம் வாங்க போறிங்களா அப்போ இந்த இந்த Document எல்லாம் சரியா பார்த்து வாங்குக.

Advertisement

முக்கிய ஆவணங்கள் 

இடம், வீடு வாங்குவது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். அப்படி வாங்கும் இடம் நமது வாழ்நாள் கனவாக கூட இருக்கும். நமக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட வேண்டும். தொழில் தொடங்க வேண்டும் என நாம் மிகவும்விரும்பி ஒரு இடத்தை அல்லது கட்டிடத்தை வாங்குவோம். அந்த இடம் பார்ப்பதற்கு அழகாக பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த இடத்திற்கான ஆவணங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் அந்த இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும். அந்த இடத்தை கொண்டு வங்கியில் கடன் பெரும் சூழல் முதல் பிற்கால தேவைக்கு சரியான ஆவணங்கள் கண்டிப்பாக தேவை. நீங்கள் ஒரு இடம் வாங்க போகிறீர்கள் என்றால் எந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். வேறு என்ன என்ன விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் விவரமாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: 

நீங்கள் வாங்கும் இடத்தின் எல்லைகளை சரிபார்க்க வேண்டும். பாக்கத்து இடத்தின் எல்லைகளையும் ஆராய வேண்டும்.

உங்கள் நிலம் மற்றும் பக்கத்து இடத்தின் எல்லைகளும் சரியாக இருந்தால் பிரச்சனையில்லை, ஆனால் எல்லைகளில் உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் இடத்திற்கான வரைபடத்தினை பார்த்து எல்லைகளை ஆராய்ந்து கொள்ளலாம்.

இதிலும் குழப்பங்கள் இருப்பதாக உணர்ந்தால் அ பதிவேடு நகலை சரிபார்க்காலம்.

நீங்கள் ஒரு இடத்தை வாங்கும் முன்பு, அந்த இடம்  கடந்த 30 வருடங்களாக யார் வைத்துள்ளார் என்பதனை தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

இதனை பற்றி தெரிந்துகொள்ள இடத்திற்கான மூல பாத்திரத்தை பார்க்க வேண்டும்.

நீங்கள் வாங்க போகும் இடத்தை விற்பனை செய்ப்பவரின் பெயரும் பட்டாவில் உள்ள பெயரும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: 

மூல பாத்திரத்திலும் விற்பவரின் பெயர் சரியாக உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் இடம் பொது பாதை, வண்டி பாதை அல்லது நிலவியல் பாதையில் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

இந்த பாதையில் நிலத்தை வாங்கும் போது பிற்காலங்களில் அரசு தனது திட்டத்திற்கான பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட இடத்திற்கான வில்லங்க சான்று குறைந்தது 30 ஆண்டுகளுக்கானவது பார்க்க வேண்டும்.

கூட்டு நிலமாக இருந்தால் அனைத்து தரப்பினரின் சம்மதத்தை பெற்ற பின்னர் இடத்தை பதிவு செய்யுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement