IFSC என்றால் என்ன? | Meaning of IFSC Code in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வங்கிகளில் அடிக்கடி கேட்கப்படும் IFSC Code என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அனைவரும் விரைவாகவே செயல்பட நினைப்போம். அதிலும் பண பரிமாற்றத்தை எளிதாக எப்படி செய்யலாம் என்று தான் யோசிப்போம். பணப்பரிமாற்றத்திற்கு முக்கியமான ஒன்று தான் IFSC Code. பணத்தை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவதற்கு Account No-தானே தேவை. எதற்காக IFSC குறியீடு தேவைப்படுகிறது என்று தெரியுமா, வாங்க விரிவாக தெரிந்து கொள்வோம்.
IFSC Code Full Form:
- ரீசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான குறியீட்டு எண் IFSC Code ஆகும். IFSC என்பதற்கு Indian Financial System Code என்பது விரிவாக்கம் ஆகும்.
IFSC Code Endral Enna:
- முன்பெல்லாம் நாம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை மாற்றுவதற்கு வங்கிக்கு சென்று, அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து லயனில் காத்திருக்க வேண்டும், ஆனால் இப்போது அவ்வாறு இல்லை மிகவும் எளிமையாக மின்னணு பரிமாற்றம் மூலம் செய்து விடலாம்.
- இந்த IFSC குறியீடு ஒவ்வொரு வங்கிக்கும் மற்றும் வங்கி கிளைகளுக்கு மாறுபடும்.
- இந்த குறியீடை வைத்து அது என்ன வங்கி மற்றும் அதன் கிளையை தெரிந்து கொள்ள முடியும்.
- இதில் மொத்தம் 11 இலக்க எண்கள் இருக்கும். அதில் முதல் நான்கு எழுத்துக்கள் வங்கியையும், கடைசி ஆறு எண்கள் வங்கி கிளையையும் குறிக்கும். அதில் ஐந்தாவது இலக்க எண் எப்போதும் பூஜ்ஜியமாக இருக்கும்.
- உதாரணத்திற்கு: SBIN0000602 என்ற வடிவத்தில் IFSC குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும்.
- முதல் நான்கு எழுத்துக்கள்: SBIN
- ஐந்தாவது இலக்க எண்: 0
- ஆறு எண்கள்: 000602
முக்கியத்துவம்:
- மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு IFSC குறியீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER (NEFT) மற்றும் Real Time Gross Settlement (RTGS) போன்ற பணப்பரிமாற்றத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
- ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்த விரும்பும் போது மக்களுக்கு IFSC குறியீடு தேவை. இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாகவும், எளிமையானதாகவும் உள்ளது.
வங்கி கணக்கை முடிக்க கடிதம் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |