இன்பம் மகிழ்ச்சி சந்தோஷம் வேறுபாடு
பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஏதாவது பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்கும் அனைவருக்கும் எங்கள் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே சந்தோசம் என்பது வேண்டும். ஒருவர் வாழ்வில் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்பம் இல்லாத வாழ்க்கை என்று எதுவுமே கிடையாது. என்ன நண்பர்களே ஒரே குழப்பமாக இருக்கிறதா..? இது என்ன மகிழ்ச்சி, இன்பம், சந்தோசம் என்று பிரித்து சொல்கிறீர்கள் மூன்றும் ஓன்று தானே என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த மூன்று வார்த்தைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்பம், மகிழ்ச்சி, சந்தோஷம் வேறுபாடு என்ன..?
பெரும்பாலும் நாம் அனைவருமே இன்பம், மகிழ்ச்சி, சந்தோசம் மூன்றிற்கும் ஒரே அர்த்தம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவை மூன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. அது என்னவென்று இங்கே காணலாம்.
இன்பம்:
இன்பம் என்பது நம் மனதிற்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது நபரையோ பார்க்கும் போதும் உண்டாகும் உணர்ச்சியாகும். இதை பிரியம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், இப்போது நீங்கள் பல வருடம் கழித்து உங்களுக்கு பிடித்த நண்பரை பார்க்கிறீர்கள் என்றால், அப்போது உண்டாவது தான் இன்பமாகும்.
பணவீக்கம் Vs பணவாட்டம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னென்ன
மகிழ்ச்சி:
மகிழ்ச்சி என்பது தான் விரும்பியதை அடையும் போது உடைவதாகும். அதாவது இப்போது நீங்கள் ஒரு பொருளின் மீது அதிக ஆசை வைத்திருந்து அந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது மனம் உணர்வு சார்ந்தது என்று சொல்லப்படுகிறது.
சந்தோஷம்:
சந்தோஷம் என்பது விரும்பிய ஒன்றை அனுபவித்து பெறுவது என்று சொல்லப்படுகிறது. அதாவது நீங்கள் விரும்பிய ஒரு பொருளுக்காக காத்திருந்து அதை பெறும்போது உண்டாவதாகும். இது உடல் உணர்ச்சி சார்ந்தது என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |