சுதந்திர தின கவிதைகள் தமிழ் | Independence Day Poetry in Tamil

Advertisement

சுதந்திர தின கவிதைகள் தமிழ் | Independence Day Poetry in Tamil

இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரம் என்பது பல போராட்டங்களுக்கும், இன்னல்களுக்கும் பின்பு பெறப்பட்ட ஒன்று என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பார்த்தால் நம்மில் நிறைய நபர்கள் பிறக்கும் முன்பே சுதந்திரம் என்பது அடையப்பட்டது. அதனால் இதில் நடந்த நிறைய உன்னதமான செயல்கள் அனைத்தினையும் பிறர் கூறி கேட்கும் அளவில் மட்டுமே இருக்கிறது. இவ்வாறு பிறர் கூறுவதை கேட்டு தெரிந்துக்கொண்டாலும் கூட இவற்றை பற்றி இன்னும் ஆழமாக அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் கவிதை வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

புதிய இந்தியா கவிதை:

புதிய இந்தியா கவிதை

பூகம்பமின்றி பூமி குலுங்கி
அடிக்காத காற்றில் மரங்கள் சாய்ந்து
புயலற்ற வெளியில் வேரறுந்த செடிகளும்
வெயிலின்றி வற்றிப்போன ஆறும்
வெடியின்றி தகர்ந்த மலைகளும்
கைபடாது அழிந்த கற்பும்
புதிய இந்தியாவில் சாத்தியமே..!

கருத்து சுதந்திரம் கவிதை:

மனத்தெண்ணம்
வெளிக்கொணர்ந்து
பகிர்ந்துண்ணும்
சுதந்திரம்..!

கருத்துக்கள்
முரண்படினும்
பிறர் புண்படுத்தாச்
சுதந்திரம்..!

பிறர் மானம்
மரியாதை
கெட இடங்கொடாச்
சுதந்திரம்..!

உடல் பொருளும்
தனி மனிதம்
சேதமில்லாத
சுதந்திரம்..!

அண்டையர்
மத நம்பிக்கை
பழித்திடாச்
சுதந்திரம்..!

துரத்துகின்ற
வாதங்கள்
பிடிவாதமாகாச்
சுதந்திரம்..!

எதிர்வாதம்
மதிப்பளிக்கும்
மிதவாதமான
சுதந்திரம்..!

கருத்துக்கும்
கற்புண்டு
கண்ணியமான
சுதந்திரம்..!

அடிப்படை
உரிமைகளில்
பொறுப்பானது
சுதந்திரம்..!

சிந்தனைகள்
சீர்தூக்கச் சேதிகளைச்
செப்பனிடும்
சுதந்திரம்..!

பிறர் மனம்
மதிப்போம்
கருத்துரிமை
காப்போம்..!

குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான சுதந்திர தின வரவேற்பு உரை 

எது சுதந்திரம் கவிதை:

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை

இயல்பாய் காற்றை சுவாசிப்பதைப் போல்
இயல்பாய் நீரைப் பருகுவதைப் போல்
மானிடப் பிறவியில் பிறந்த எவர் ஒருவரும்
தன் உரிமையை விட்டுத் தராது
பிறர் உரிமையில் தலையிடாது
வாழ்வதுதான்
உண்மையில் சுதந்திரம்..!

பெண் சுதந்திரம் கவிதை:

கண்ணோடு பேசி
காதல் வளர்க்க சொல்லும்
பண்டைய
இதிகாசம்
மண்ணை பார்த்து நடந்து
மானங்கெட்ட
மானத்தை
சொல்லி கொடுக்கும்
மாக்களின் தற்கால
விதிகாசம்
இதில் அறியப்பட வேண்டியது
மலர்களின் இதயங்களை
மட்டுமல்ல..!
அன்றைய நாளைய
பெண்களின்
சுதந்திரமும் தான்..!

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை:

பெண் சுதந்திரம் கவிதைஅண்டி வந்தவன் ஆச்சி அமைக்க
ஆண்ட மக்களோ அடிமை ஆகினரே..!

சுகமெல்லாம் சுணங்கி போக
துக்கம் மட்டுமே தொண்டைவரை..!

கண்விழித்த மக்களோ கவலையில் நிற்க
எதிர்த்தவனெல்லாம் எமலோகம் எனும் நிலை..!

இருட்டில் விதைத்த புரட்சி விதை
இமயம் வரை படர்ந்திடவே..!
சிந்திய ரெத்தம் அத்தனையும்
சீறிப்பாய்ந்தது சினம்கொண்டு..!

ஆயுதம் தாங்கிய அன்னியனும்
அடங்கியே போனான் அதிரடியாய்..!

படிப்பினை நமக்கும் அதில் உண்டு
பாடுபடுவோம் ஒற்றுமை எனும் கொடிபிடித்து..!

நாட்டை காக்கும் வீரனாக
மூவர்ண கொடியை மூச்சாக
நெஞ்சோடு பிடித்து நானும் சொல்வேன்
“ஜெய் ஹிந்த்” !

சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement