சுதந்திர தின பாட்டு | சுதந்திர தின பாடல்கள் வரிகள் | Independence Day Song in Tamil Lyrics
நாம் பிறந்த இந்திய நாட்டில் எத்தனையோ முக்கியமான தினங்கள் மற்றும் பண்டிகைகள் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றோம். ஆனால் இவற்றை எல்லாம் விட மிகவும் முக்கியமாக சுதந்திர தினம் மற்றும் குரியரசு தினம் இந்த இரண்டு தினங்களும் சிறப்பாக கொண்டப்படுபட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான சுதந்திர விழா ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வியாழன்கிழமை அன்று வருகிறது. இத்தகைய நாளானது இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடம் இருந்து 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தனை போற்றி கொண்டாடப்படுகிறது. ஆகவே இன்றைய பதிவில் இந்த சுதந்திர தின விழாவினை போற்றி கூறும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடல் வரிகளை பார்க்கலாம் வாருங்கள்..!
சுதந்திர தின பாடல் வரிகள் | Independence Day Songs Lyrics in Tamil for School Students:
உதிரமும் உயிரும் மண்ணில் விதைத்து
சுதந்திரம் அடைந்தோமே…
மணிக்கொடி அதனை சுதந்திர காற்றில்
பறக்க விட்டோமே..
தலைவர் யாவரும் பொது நலன் கருதி
மீட்டு எடுத்தது…. சுதந்திரம்..சுதந்திரம்..!
தியாகங்களை நாட்டுக்காக
நினைவு கூறவே இக்கணம்…இக்கணம்..
விடுதலை தாகம் விஞ்சி நின்றதால்
வெள்ளையன் ஆட்சி அகன்றது..
அடிமை கோலம் அறுத்து எறிய
குருதியும் ஆறாய் ஓடியது..
கொடுங்கோல் ஆட்சியால் அன்னையர் மண்ணிலே
அடிமை ஆக்கி வாட்டினர்.
வாழ்க இந்தியா என்று சொன்னாலும்
சிறையில் தூக்கி போட்டனர்.
சுதந்திர காற்றை சுவாச காற்றாய் விரும்பிய
நம் முன்னோர்கள்.
அடித்து உதைத்து உதிரம் குடித்த
ஆங்கிலேயர்
முப்பது கோடி மக்களிருந்தும்
ஆட்சி இல்லையே நம்மிடம்
ஆயுதம் கொண்டு அடக்கி ஆண்ட
சதி கார அந்நியர்
துயரம் பலவும் தாங்கி நின்ற
தியாக தீபங்களே..
இனிமை சுதந்திரம் நமக்கு கிடைக்க
உருகிய சொந்தங்களே…!
தொடர்புடைய பதிவுகள் 👇👇 |
சுதந்திர தின பாடல்கள் pdf |
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை |
சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை |
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |