சுதந்திர தின பாடல் வரிகள் | Independence Day Songs in Tamil

Advertisement

Independence Day Songs Tamil

நமது தாய் நாடான இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தினத்தினை ஆகஸ்ட் 15 நாள் செவ்வாய் கிழமை கொண்டாட இருக்கிறோம். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து தாய் நாட்டின் சுதந்திரத்தை அடைந்தது. ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் இந்திய மக்களின் வாழ்விலும், மனதிலும் ஆழமாக பதிந்த நாளாக விளங்குகிறது. நமது தாய்நாடான இந்தியா சுதந்திரம் பெற்று, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இந்த நாளில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சுதந்திர தின பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

சுதந்திர தின பாடல் வரிகள்:

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு

எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துளுக்கர் என் தோழர்

அல்ஹம்து லில்லாஹி
ரப்பில் ஆலமீன் அர்
ரஹ்மானிர் ரஹீம்

திசை தொழும்
துளுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே

ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்

கங்கை பாயும் வங்கம்
தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல்தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு

இரிகோ இரிகோ
இக்கட பாருங்கோ ஹோ
இரிகோ இரிகோ
இக்கட பாருங்கோ

சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ

ஸ்ரீ சைலம் திருப்பதி
க்ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ

ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு

பிருந்தாவனமும்
சாமுண்டி கோவிலும்
நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி
ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு

படச்சோன் படச்சோன்
எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா
அல்லாஹு அல்லா
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிச்சூர் ஜில்லா

தேக்குத் தென்னை
பாக்கு மரங்கள் இவிடே
நோக்கணும் நீங்க

தேயிலை மிளகு
விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

சுதந்திர தின பாடல்கள் pdf

படச்சோன் படச்சோன்
எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா
அல்லாஹு அல்லா
அல்லாஹு அல்லா
அல்லாஹு அல்லா

சுனோ சுனோ பாய்
சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ

ஆஹா தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ

ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஆவோ ஆவோ
ம் ஆவோஆவோ ஆவோஆவோ
ஆவோஆவோ ஆவோஆவோ
ஆவோ ஆவோஆவோ

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு

பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ யுஆஹு
யாஹூ யாஹூ யுஆஹு
யாஹூ யாஹூ யுஆஹு
யாஹூ யாஹூ

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
ஆண்கள்: எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பெண்கள்: பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்
ஆண்கள்: பேசிப் பழகும் கிள்ளைகள்

சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement