குழந்தைகளுக்கான சுதந்திர தின விழா பற்றிய பேச்சு போட்டி | Independence Day Speech for Kids in Tamil..!

Advertisement

குழந்தைகளுக்கான சுதந்திர தின விழா பற்றிய பேச்சு போட்டி | Independence Day Speech for Kids in Tamil..!

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவானது 1947-ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணியளவில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று சுதந்திரம் அடைந்தது. 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து தற்போது உள்ள 2024-ஆம் ஆண்டுடன் 76 வருடங்கள் முடிந்து 77-வது வருடம் தொடரப்போகிறது. இத்தகைய சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்ட வாங்கியது என்று நமக்கு தெரியாமல் இருந்தாலும் கூட இதை பற்றி ஓரளவு நாம் கேள்வி பட்டிருப்போம். மேலும் இந்த சுதந்திர போராட்டத்தில் எண்ணற்ற தலைவர்களின் போராட்டம் ஆனது நிறைந்து இருக்கிறது என்பதை பற்றி நாம் சிறு வயதில் படித்து இருப்போம். அந்த வகையில் இன்று 76-வது சுதந்திர தின விழாவை சிறப்புக்கும் விதமாக அதனை பற்றிய பேச்சு போட்டியினை படித்து பார்க்கலாம் வாருங்கள்..!

சுதந்திர தினம் பேச்சு போட்டி 2024:

முன்னரை:

ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய 15-ஆம் தேதி ஆனது நாம் அனைவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இருந்தாலும் கூட அதில் எண்ணற்ற தேசத் தலைவர்களின் ஞாபகமாகவும், விடா முயற்சிக்கான ஒரு எடுத்துக்காட்டாகவும் நம் நாட்டில் வாழ்ந்த தலைவர்கள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு:

 சுதந்திர தினம் பேச்சு போட்டி 2023

இந்திய நாடு எப்படியாவது சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல் முறையாக அகிம்சை முறையில் போராட தொடங்கியவர் மஹாத்மா காந்தி அவர்கள். இவர் சுதந்திரத்திற்காக வெள்ளையனே வெளியேறு மற்றும் உப்பு சத்திய கிரகம் என்ற முக்கிய அகிம்சை முறையினை கையில் தொடங்கினார். 

அதேபோல் 21 நாட்கள் வரையிலும் எந்த உணவினையும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்தார். கடைசியில் பல வகையான போராட்டங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்று தந்தார்.

சுபாஷ் சந்திர போஸின் பங்கு:

ஆங்கிலேயரின் பிடியில் இந்தியாவானது சிக்கி கொண்டு இருக்கும் இத்தகைய நிலையில் என்னால் ஆங்கிலேயருக்கு கீழ் படிந்து பணிபுரிய முடியாது என்று எண்ணி தனது பதவியினை சுபாஷ் ராஜினாமா செய்து இந்தியா திருப்பினார்.

இந்தியாவிற்கு வந்த கையோடு 1922-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரவிருந்த வேல்ஸ் என்ற இளவரசர் வருகையினை எதிர்த்து சுபாஷ் சந்திர போஸ் கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்று போராடினார்.

நமது தேசியக் கொடி கட்டுரை

மருது பாண்டியர் போராட்டம்:

ஆங்கிலேயரை எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்று நினைத்து 1785 முதல் 1801 வரை சிவகங்கை சீமையில் பெரிய மருது மற்றும் சிறிய மருது இருவரும் எதிர்த்து போராடினார்கள்.

அதே சமயம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மற்ற மக்களையும் ஒன்றாக சேர்த்து ஆங்கிலேயரை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்து இருவரும் போராடினார்கள். ஆனால் அண்ணன், தம்பி இருவரும் ஆங்கிலேயரின் பிடியில் சிக்கிய மரணம் அடைந்தனர்.

திருப்பூர் குமரன் சுதந்திர போராட்டம்:

இந்தியா சுதந்திரம் அடைந்தது

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் திருப்பூர் குமரனும் ஒருவராக இருந்தார். இவர் இளம் வயதில் இருந்து நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார்.

மேலும் காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கூட திருப்பூரில் நடக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமை பொறுப்பினை ஏற்றும் வழிநடத்த தொடங்கினார்.

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 10-ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆங்கிலேயருக்கான எதிர்ப்பு போராட்ட வீரத்தில் கலந்து கொண்ட திருப்பீர் குமரன் ஆங்கில அரசின் காவல்துறை அதிகாரிகளால் அடிபட்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி அன்று மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

முடிவுரை:

மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், திருப்பூர் குமரன், ஜவகர்லால் நேரு, வா.உ.சி சிதம்பிரானார், பாரதியார் மற்றும் புலித்தேவர் ஆகியோர் பல போராட்டங்களை நடத்திய பிறகு 1947-ஆம் ஆண்டு இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று சுதந்திரம் அடைந்தது.

மேலும் இத்தகைய சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement