Independence Day Speech in Tamil for UKG Students
ஒவ்வொரு இந்தியருக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ரொம்ப முக்கிய நாளாக இருக்கிறது. இது என்ன நாள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நமது தாய் நாடு சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடைவதற்கு பல தலைவர்கள் காரணமாக இருக்கின்றனர். இவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தான் சுதந்திரம் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்றவை நடத்துவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள். அதில் இந்த பதிவில் UKG மாணவர்களுக்கான பேச்சு போட்டி கட்டுரையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
UKG மாணவர்களுக்கான பேச்சு போட்டி கட்டுரை:
மதிப்பிற்குரிய விருந்தினர் ஐயா, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அன்பு நண்பர்களே, உங்கள்அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாட இன்று நாம் அனைவரும் கூடியுள்ளோம்.
இந்த நாளானது பிரிட்டிஷ் அரசாங்கமித்திடமிருந்து நமது இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த நாள் சுதந்திரத்தை விரும்பும் துணிச்சலான தேசமாக நமது உண்மையான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம் நமது முன்னோர்கள் மற்றும் நமது தலைவர்களின் பல தசாப்த கால போராட்டங்களின் விளைவாக கிடைத்தது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் அகிம்சை போராட்டம், வெள்ளையென வெளியேறு இயக்கமும் முக்கியமான ஒன்றாகும். 1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்ற பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டது. இவர் சுதந்திற்காக மட்டுமில்லாமல் மது ஒழிப்பு, தீண்டாமை, சமூக நீதி போன்றவற்றிற்காகவும் போரடியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வணிகத்திற்காக வந்தார்கள் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் இதனை மூலமாவே நமது நாட்டை அடிமைப்படுத்தினார்கள். இதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
1906-ம் ஆண்டு சுதேசி நாவாய் சங்கம் கப்பல் நிறுவனத்தை முறையாகப் பதிவு செய்து, பலரின் கூலியில் கப்பலை வாங்கி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இயக்கச் செய்தார். இந்திய மக்கள் அனைவரும் பிரிட்டிஷ் கப்பலை புறக்கணித்து, வ.உ.சி என்ற கப்பலில் பயணம் செய்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சியின் கப்பலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் கப்பலில் இலவச பயணத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கிலேயரக்ளுக்கு எதிராக மக்களை திருப்புகிறார் என்று வ.உ.சி சிறையில் அடைக்கப்பட்டார்.
பல போராட்டங்களுக்கு பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மையில் இந்தியாவின் பெருமையை குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு இந்தியனும் உறுதிமொழி எடுப்பது முக்கியம்.
பல தலைவர்களின் உயிரை மாய்த்து கொண்டு பெற்றெடுத்த சுதந்திரத்தை காப்போம்.!
வாழ்க இந்தியா.!
வளர்க இந்தியா
ஜெயஹிந்த்.!
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
சுதந்திர தின கவிதைகள் தமிழ் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |