சுதந்திர தின கருப்பொருள் 2024 | 78 Independence Day Theme in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டிற்கான சுதந்திர தின கருப்பொருள் 2024 பற்றி கொடுத்துள்ளோம். இந்திய சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது தெரியும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்னவென்று கேட்டல் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துக்கொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் சுதந்திர தினம், ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 2024, 78 -வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, 78- வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
இந்திய சுதந்திர தினம் பற்றிய 10 வரிகள்.!
Independence Day Theme 2024 in Tamil | 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள்:
78 -வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat)ஆகும். இது சுதந்திரத்தின் 100வது ஆண்டை ஒட்டி, 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் வகையில் உள்ளது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘விக்சித் பாரத்’ ஆனது 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான பயணத்தை வலியுறுத்துகிறது.2047ல், இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று 100வது ஆண்டை கொண்டாடும். சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்திசைந்து, இந்த ஆண்டிற்கான சுதந்திர தினத்தின் கருப்பொருளாக ‘விக்சித் பாரத்’ உள்ளது.
இந்த கருப்பொருள் ஆனது, இந்தியாவின் உலகளாவிய நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுஉள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் என அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையும் என்பதை எடுத்துரைக்கிறது.
மேலும், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் உள்ளது. வளமான மற்றும் நெகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்குவதற்கான விருப்பத்தை குறிக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |