இன்டெக்ஸ் ஃபண்ட்கள் | What is Index Fund in Tamil
ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் Index Fund என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். fund என்றால் அனைவருக்கும் தெரியும். அதிகளவு மக்கள் அனைவரும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய தயங்குவார்கள் அதற்கு காரணம் சிலருக்கு பங்கு சந்தை லாபம் நஷ்டம் பற்றி தெரியாது அல்லது பங்கு சந்தை பற்றி தெரியாது இந்த இரண்டு விஷயம் தான் முதலீடு செய்யாமல் இருக்க காரணம் ஆனால் இப்போது மக்கள் அனைவரும் முதலீடு செய்து லாபம் பெறுவதற்கு நிறைய முதலீட்டு நிறுவனங்களை நாடி வருகிறார்கள். அதில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்டெக்ஸ் ஃபண்ட் என்றால் என்ன இதில் என்ன லாபம் கிடைக்கும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.!
மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள் |
What is Index Fund in Tamil:
NIFTY, SENSEX போன்ற புள்ளிகளின் உள்ளடக்கத்தில் வரும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வது தான் Index Fund. உதரணத்திற்கு NIFTY என்றால் அதில் வரும் 50 நிறுவனங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருப்பார்கள்.
பண்ட் மேனேஜர்களுக்கும் பெரிய அளவில் வேலை இல்லாததால் Expense Ratio குறைவாக இருக்கும். அதே நேரத்தில் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களிலே அவர்கள் முதலீடு செய்வதால் ரிஸ்க் என்பது குறைவாக இருக்கும். ரிடர்ன் NIFTY, SENSEX போன்றவற்றின் ரிடர்னை ஒத்து இருக்கும்.
பொதுவாக நாம் கொடுக்கும் பணத்தை index fund ஆனது index யில் முதலீடு செய்வார்கள். பொதுவாக மற்ற fund ஆனது stock ல் முதலீடு செய்வார்கள். ஆனால் இந்த index fund index யில் முதலீடு செய்கிறார்கள். இப்படி முதலீடு செய்வதால் மற்ற நிதி நிறுவனத்தில் உள்ளதை போல் இல்லாமல் சொத்துக்களின் வரிசைகள் மாறாமல் அப்படியே வைத்துக்கொள்வார்கள் மற்ற நிறுவனத்தில் சொத்துக்களை மாற்ற முடியும் இதில் மாற்ற முடியாது.
உங்களுக்கு மற்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு உங்களிடம் அதிகளவு பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அதிகளவு லாபம் வேண்டும் என்பார்கள் அவர்களுக்கு இந்த Index Fundயில் முதலீடு செய்ய தகுந்த நிதி நிறுவனமாகும்.
உங்களின் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு இந்த Index fund யில் முதலீடு செய்தால் பின் வரும் காலங்களின் உங்களுக்கு லாபத்தை தரும்.
மற்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பணம் இல்லை ஆனால் அந்த நிறுவனதில் கிடைக்கும் 10% அப்படியே உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இந்த Index fund யில் முதலீடு செய்யலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |