செயற்கைக்கோள்களின் பட்டியல் | Seyarkai Kol Names in Tamil | Satellite Names in Tamil
விண் கலங்கள் வரிசையில் பார்க்கும் பொழுது மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாக விளங்குகிறது செயற்கைக்கோள். நிலா போன்ற இயற்கைக் கோள்கள் போல் விண்வெளியில் உலா வருவதினால் இதற்கு செயற்கைக் கோள் என்ற பெயர் வந்தது. 1975-ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை 50-ற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல பேர் அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் நம்முடைய பதிவில் நிறைய பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியலை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
| கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில் |
நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்கள் 10 எழுதி அனுப்பவும் | இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள்கள் பெயர்கள்
| செயற்கைக்கோள் பெயர் | ஏவப்பட்ட நாள் | ஏவுகலம் |
| ஆரியபட்டா | 19 ஏப்ரல் 1975 | உருசியாவின் இண்டர்காசுமோசு |
| பாஸ்கரா (செயற்கைக்கோள்) | (பாஸ்கரா -I) | 07 ஜூன் 1979 | உருசியாவின் இண்டர்காசுமோசு |
| ரோகிணி தொழில்நுட்ப ஏவு ஊர்தி | 10 ஆகஸ்ட் 1979 | செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
| ரோகிணி (செயற்கைக்கோள் – ரோகிணி ஆர். எசு -1) | 18 ஜூலை 1980 | செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
| ரோகிணி (செயற்கைக்கோள் – ரோகிணி ஆர். எசு – டி 1) | 31 மே 1981 | செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
| ஆப்பிள் (செயற்கைக்கோள்) | 19 ஜூன் 1981 | ஏரியேன் |
| பாஸ்கரா (செயற்கைக்கோள்)(பாஸ்கரா -II) | 20 நவம்பர் 1981 | உருசியாவின் இண்டர்காசுமோசு |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1A) | 10 ஏப்ரல் 1982 | டெல்ட்டா – டெல்ட்டா ஏவு ஊர்தி |
| ரோகிணி RS-D2 | 17 ஏப்ரல் 1983 | செயற்கைக்கோள் ஏவு ஊர்தி |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1B) | 30 ஆகஸ்ட் 1983 | அமெரிக்க விண்ணோடம் STS-8( சேலஞ்சர் ) |
| ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-1) | 24 மார்ச் 1987 | மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
| இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1A) | 17 மார்ச் 1988 | உருசிய வோஸ்டாக் |
| ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-2) | 13 ஜூலை 1988 | மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் -1C) | 21 ஜூலை 1988 | ஏரியேன் |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட் – 1D) | 12 ஜூன் 1990 | டெல்ட்டா ஏவு ஊர்தி |
| இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1B) | 29 ஆகஸ்ட் 1991 | வோஸ்டாக் |
| ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C) | 20 மே 1992 | மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2DT) | 26 பிப்ரவரி 1992 | ஏரியேன் |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2A) | 10 ஜூலை 1992 | ஏரியேன் |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2B) | 23 ஜூலை 1993 | ஏரியேன் |
| இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1E) | 20 செப்டம்பர் 1993 | துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (PSLV-D1) |
| ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C2) | 04 மே 1994 | மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV) |
| இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-P2) | 15 அக்டோபர் 1994 | துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (PSLV-D2) |
| இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2C) | 07 டிசம்பர் 1995 | ஏரியேன் |
| இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1C) | 29 டிசம்பர் 1995 | உருசிய மோல்னியா |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |













