Indiranin Aayudham in Tamil | இந்திரனின் ஆயுதம்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்திரனின் ஆயுதம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்திரன் அல்லது தேவேந்திரன் என்பவர், தேவ உலகத்தின் அரசர் ஆவார். இவர் முக்கியமாக தேவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவருடைய மனைவி இந்திராணி. இந்திரனின் தேரோட்டி மாதலி ஆவார். இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர். இவர் போர்க்குணம் கொண்ட கடவுளாக கருதப்படுவதால், தேவர்கள் போருக்கு செல்லும் முன்பு இந்திரனை வழங்கி விட்டு தான் செல்வார்கள்.
இந்திரன் யானை வாகனத்தில் பயணம் செய்வது போன்றும், அவரது இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தியவாறும் இருப்பதை நாம் அனைவருமே பார்த்து இருப்போம். ஆனால், அவர் கையில் இருக்கும் ஆயுதம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
இந்திரனின் ஆயுதம் பெயர்:
ஆயுதம் என்பதன் வேறு சொல் என்ன.?
இந்திரனுக்கு வஜ்ஜிராயுதம் கிடைத்த கதை:
- ஒருமுறை அசுரர்களை போரில் வென்ற தேவர்கள், அவர்களின் சக்திமிக்க படைக்கலன்களை கடிதவ முனி தசீசியிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்தார்கள். படைக்கலன்கள் அனைத்தும் இரத்த கறையாக இருந்ததால், அந்த படைக்கலன்களை புனித ஆற்றில் சுத்தம் செய்து, சுத்தம் செய்த நீரினை சிறிதளவு பருகினார். அதனால், அந்த படைக்கலன்கள் சக்தி முழுவதும் கடிதவ முனி தசீசியின் உடலில் சேர்ந்தது.
- பல காலங்களுக்கு பிறகு, தேவாசுர போர் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அதனால், தேவர்கள், தசீசி முனிவரிடம் கொடுத்து இருந்த படைக்கலங்களை திரும்ப பெற்று, அசுரர்களுடன் போரிட சென்றனர். போரின் முடிவில் தேவர்கள் படுதோல்வி அடைந்தார்கள்.
- போரில் தோற்று வந்த செய்தியை தேவர்கள் தசீசி முனிவரிடம் கூறினார்கள். அப்போது, தசீசி முனிவர் அவரின் ஞானக்கண்னால் தேவர்களின் படைக்கலங்களின் வலிமை போனதற்கான காரணத்தை உணர்ந்தார்.
- தாம் செய்த செயலால், தேவர்களின் ஒட்டுமொத்த படைக்கலங்களின் சக்தியும் தன் உடலில் இருப்பதை உணர்ந்த தசீசி முனிவர், நான் உண்ணாநோன்பு இருந்து மரணம் அடைந்த பிறகு, என் உடலில் உள்ள முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் சக்திமிக்க படைக்கலனாக செய்து, அதனை இந்திரன் கையில் கொடுத்து விடுங்கள். அடுத்து, என் உடலில் உள்ள கை, கால், மற்றும் தொடை எலும்புகள் போன்றவற்றில் மற்ற ஆயுதங்கள் செய்து தேவர்கள் கையில் கொடுத்து விடுங்கள். வஜ்ராயுதம் மற்றும் பிற ஆயுதங்கள் தேவர்களை, அசுரர்களிடம் இருந்து எப்போதும் பாதுக்காக்கும் என்று கூறி மரணம் அடைந்தார்.
- தசீசி முனிவர் கூறியபடி, தசீசி முனிவர் இறந்த பிறகு, தேவர்களின் சிற்பி ஆன விஸ்வகர்மா, தசீசி முனிவரின் நீண்ட முதுகெலும்பை கொண்டு சக்திமிக்க வஜ்ராயுதம் செய்து தேவராஜன் இந்திரனிடம் கொடுத்தார். இவ்வாறே இந்திரனுக்கு வஜ்ஜிராயுதம் கிடைத்தது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |