உறவுமுறை கடிதம் எழுதும் முறை..! Informal Letter Format in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம். இன்று நாம் உறவுமுறை கடிதம் எழுத்து முறையை பற்றி தெரிந்து கொள்வோம். இன்றிய காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு கடிதம் எப்படி எழுத வேண்டும் என்பது கூட தெரிவதில்லை.
காரணம் யாரும் கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் நமது கைகளுக்கு அடக்கமாக ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்தி யாரிடம் வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்துவிடும் மிக எளிதாக பேசிவிடலாம். இதன் காரணமாகவே யாரும் இன்றிய காலத்தில் கடிதம் எழுதவதில்லை. இருப்பினும் அரசு அலுவலகங்களில் ஏதாவது கோரிக்கை வேண்டுமென்றால் அப்பொழுது நாம் கடிதம் தான் எழுதி தர வேண்டியதாக இருக்கும். அப்பொழுது தெரியவில்லை என்றால் மிகவும் சிரமாக இருக்கும். இதன் காரணமாக தான் பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் பயன் பெரும் வகையில், இங்கு உறவு முறை கடிதம் எழுத்து முறையை பற்றி பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அதனை எப்படி எழுதலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வங்கி கணக்கு புதுப்பித்தல் கடிதம் எழுதும் முறை
உறவுமுறை கடிதம்:
புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
15, காந்தி நகர்,
திண்டுக்கல்
நாள்: 20.02.2020
அன்புள்ள மாமாவிற்கு,
அக்கா மகள் யாழினி எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் அத்தையின் நலத்தையும் அறிய விரும்புக்கோறேன். எங்கள் ஆசிரியர் கவிஞர் மு.மேத்தா எழுதிய “கண்ணீர்ப் பூக்கள்” என்ற நூல் பற்றி கூறினார். அந்நூலில் அவர் சொன்ன சில கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நூலை முழுமையும் நான் வாசித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். திண்டுக்கல்லில் அந்நூல் கிடைக்கவில்லை. எனவே சென்னையில் உள்ள புத்தக அங்காடியில் அந்நூலை வாங்கி எனக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு அன்புள்ள,
யாழினி.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மன்னிப்பு கடிதம் எழுதும் முறை
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |