மிளகை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்..! | Information about Pepper in Tamil 

Information about Pepper in Tamil

மிளகு பற்றிய தகவல் | Information about Pepper in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவரும் உணவில் சுவையூட்டியாகவும் சில நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தும் மிளகு பற்றி தான். நாம் அனைவருக்கும் மிளகு தெரிந்திருக்கும் ஆனால் இந்த மிளகு எப்படி உருவானது, அதன் பிறப்பிடம், வேறுபெயர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மிளகு பற்றிய தகவல்:

pepper seeds information in tamil

மிளகு என்பது ‘பைப்பரேசி’ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. பூத்து, காய்த்து படர்ந்து வளரக்கூடிய ஒரு கொடி தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வாழ் மிளகு என்று இரு வகைகள் உள்ளது.

சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த கொடி ஒரு பல்லாண்டு தாவரமாகும். மேலும் இது ஒரு படர்ந்து வளரும் கொடிவகை தாவரம் என்பதால் இது தனக்கு அருகில் உள்ள மரம், தூண், கயிறு போன்றவற்றை பற்றிக்கொண்டு நன்கு படர்ந்து வளர்ந்துவிடும்.

இந்த மிளகு கொடியில் உள்ள சிறுகனிகள் உலர வைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

வேறுபெயர்கள் மற்றும் பிறப்பிடம்:

இந்த மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகளவு மிளகு பயிரிடப்படுகிறது. மேலும் மிளகுக் கொடி ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாகும்.

அதனால் தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் உள்ளது. இதிலுள்ள பெப்ரைன் என்ற வேதிப்பொருள் தான் மிளகின் காரத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மிளகின் வேறுபெயர்கள் குறுமிளகு, கோளகம், மிரியாலு, மிரியம், மிரியாகொனு போன்றவை ஆகும்.

வகைகள் :

pepper information in tamil

இது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என வகைபடுத்தப்படுகிறது.

பயன்கள்:

இந்த மிளகு தமிழ்நாட்டு உணவு வகைகளில் முக்கிய சுவையூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. அதனால் மிளகு சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

சளி, கோழை, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை நீங்குவதற்கு  மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. மேலும் விஷ முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.

கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள் 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil