கொட்டாங்குச்சியில் மருதாணி தயாரிப்பது எப்படி? | Instant mehandi liquid in tamil
Instant mehandi liquid in tamil:- பெண்களுக்கு மருதாணி போட்டுக்கொள்வதற்கு மிகவும் பிடிக்கும், அந்த வகையில் மருதாணி இலைகளை பயன்படுத்தாமல் மிக எளிமையான முறையில் கொட்டாங்குச்சியில் மருதாணி தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க. கொட்டாங்குச்சியில் செய்ய கூடிய இந்த மருதாணியை கைகளில் போட்ட இரண்டே நிமிடத்தில் சிவந்து விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி போட்டு கொள்வார்கள்.
கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2020..! |
மருதாணி தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:-
- கொட்டாங்குச்சி – 2 சிறு சிறு துண்டுகளாக உடைத்தது
- நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்
- தகரடப்பா (paint dabba) – 1
- மட்டி குங்குமம் – 2 ஸ்பூன்
- டம்ளர் – 1
கொட்டாங்குச்சியில் மருதாணி தயாரிப்பது எப்படி?
செய்முறை:
பெயிண்ட் டப்பா (paint dabba) ஒன்றை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் உடைத்த கொட்டாங்குச்சிகளை போட வேண்டும்.
பின் இரண்டு ஸ்பூன் நாட்டு சர்க்கரையை அவற்றில் தூவிவிட வேண்டும். அதன் பிறகு ஒரு சிறிய டம்ளரை உள்ளே வைக்க வேண்டும்.
புதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா..! |
பின் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எடுத்து கொள்ளுங்கள், இந்த பாத்திரத்தை தகரடப்பாவின் மேல் பகுதியில் காற்று புகாத அளவிற்கு வைத்து மூட வேண்டும். (உதாரணத்திற்கு மேல் காட்டப்பட்டுள்ள படத்தை பார்வையிடங்கள்)
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த தகர டப்பாவை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்களை வரை சூடுபடுத்த வேண்டும்.
10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து பெயிண்ட் டப்பாவை திறந்து பார்த்தால், உள்ளே வைத்திருந்த டம்ளரில் ஒரு வகையான திரவம் போல் இருக்கும்.
அந்த திரவத்தை எடுத்து ஒரு சுத்தமான பவுலில் ஊற்றி கொள்ளுங்கள். பின் அந்த திரவத்திற்கு தேவையான அளவு மட்டி குங்குமம் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
இப்பொழுது மருதாணி தயார் ஆகிவிட்டது, இந்த கலவையை பட்ஸை பயன்படுத்தி மருதாணி போல் அல்லது தங்களுக்கு பிடித்த டிசைன்களில் போட்டு கொள்ளலாம்.
இந்த மருதாணி சிவப்பதற்கு இரண்டே நிமிடங்கள் தான் ஆகும். மற்ற மருதாணிகள் போல் சிவப்பதற்கு அதிக நேரம் ஆகாது என்பதால் குழந்தைகளுக்கு கூட போட்டு விடலாம் எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
சூப்பர் புதிய மெஹந்தி டிசைன் 2020..! |
ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |